முர்சிதாபாத் மாவட்டம்
முர்சிதாபாத் மாவட்டம் (Murshidabad district, வங்காள மொழி: মুর্শিদাবাদ জেলা) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது கங்கை நதியின் இடக்கரையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள முர்ஷிதாபாத் நகரின் பெயரைக் கொண்டே இம்மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இம்மாவட்டம் இராஜதானி கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பகரம்பூர் நகரம் ஆகும்.
முர்சிதாபாத் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() | |
நாடு | ![]() |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
தலைநகர் | பகரம்பூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,324 km2 (2,056 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 71,02,430 |
• அடர்த்தி | 1,334/km2 (3,460/sq mi) |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
இணையதளம் | http://www.murshidabad.gov.in/ |
எல்லைகள் தொகு
5,341 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் எல்லைகளாக மால்டா, சகேப்காஞ், பிர்ப்ஹம், பர்தாமன் மற்றும் நதியா போன்ற மாவட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இம்மாவட்டத்தின் எல்லை வங்காள தேசம் நாட்டுடனும் அமைந்துள்ளது.
பொருளாதாரம் தொகு
இம்மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. பட்டு மற்றும் தறி நெசவு போன்றவையும் முக்கியத் தொழில்களாகும்.
மக்கட்தொகை தொகு
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 71,02,430 ஆகும்.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,334 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 21.07% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 957 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 67.53%ஆகும்.