சாரநாத்
சாரநாத் அல்லது இசிபதனம் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்.[1][2]
சாரநாத் இசிபதனம் सारनाथ சாமாத, மிரிகதாவ, மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான | |
---|---|
நகரம் | |
![]() தாமேக் தூபி, சாரநாத் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | இந்தி |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |

இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே சைன மதத்தின் 11வது தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் சிரேயன்சுவநாதர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
சாரநாத் (மான்களின் நகரம்) என்ற இந்நகரம் சாமாத, மிரிகதாவ (மான் பூங்கா), மிகதாய, இசிபதனம் (ரிசிகள் தரையிறங்கிய இடம்) எனப் பல பெயர்களில் வழங்கி வருகின்றது. புத்தரால் குறிப்பிடப்பட்டுள்ள இசிபதனம் என்ற தலம் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.[3]
குப்தர்கள் காலத்தில் சாரநாத் குன்றில் எண்கோண வடிவ சௌகந்தி தூபி நிறுவப்பட்டது.
இதனையும் காண்க தொகு
படக்காட்சியகம் தொகு
-
சாரநாத்தில் புத்தரின் சிலை
-
திகம்பர சமணக் கோயிலின் உட்புறக் காட்சி
-
திபெத்திய பௌத்தக் கோயில், சாரநாத்
-
இலங்கை பௌத்தர்களின் விகாரை, சாரநாத்
-
மௌரிய படைவீரன், சாரநாத்
-
மௌரிய குதிரை வீரன், சாரநாத்
-
யானையின் தூபி, சாரநாத்
குறிப்புகள் தொகு
- ↑ "SARNATH" இம் மூலத்தில் இருந்து 2018-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180714144229/http://varanasi.nic.in/tourist/tourist7.html.
- ↑ Saranath - History
- ↑ (D.ii.141)