தாமேக் தூபி

இந்தியாவில் உள்ள ஒரு கட்டடம்

தாமேக் தூபி (Dhamek Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள சாரநாத் எனுமிடத்தில் சௌகந்தி தூபி அருகே நிறுவப்பட்டுள்ளது.[1]

தாமேக் தூபி
धामेक स्तूप (இந்தி)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா சாரநாத், வாரணாசி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்25°22′51″N 83°01′28″E / 25.3808°N 83.0245°E / 25.3808; 83.0245
சமயம்பௌத்தம்

பௌத்த சமயத்திற்கு முன்னர் இறந்த இந்து சமயச் சாதுக்களை அமர்ந்த நிலையில் வைத்து சமாதிகள்கள் எழுப்பினர்.[2][3] கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர், அவரது உடலை எரியூட்டி கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளை எட்டு பகுதிகளாகப் பிரித்து, எட்டு இடங்களில் வைத்து அதன் மேல் தூபிகள் எழுப்பினர். அவ்வெட்டு இடங்களில் சாரநாத் மற்றும் சாஞ்சி குறிப்பிடத்தக்கதாகும்.[4] தமோக் தூபி கிபி 500ல் நிறுவப்பட்டது.[5]

மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில், கிமு 249ல் கௌதம புத்தர் மற்றும் புத்தரின் சீடர்களின் நினைவாக, பிக்குகள் தங்குவதற்கும், சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் சாரநாத், சாஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிய தூபிகளையும், சைத்தியங்களையும், விகாரைகளையும் நிறுவினார்.[6] தமோக் தூபி அருகே அசோகரின் தூண்கள் உள்ளது.

தாமேக் தூபியை ரிஷிபத்தனா என்றும் (ரிஷி வருகை புரிந்த இடம்) அழைப்பர். பல்லாண்டு தவத்திற்குப் பின்னர் புத்தகயாவில் ஞானம் அடைந்த கௌதம புத்தர், தாம் பெற்ற ஞானத்தை, தம் முதல் ஐந்து சீடர்களிடம் உரைப்பதற்கு சாரநாத்திற்கு வந்தார்.[7][8]

தாமேக் தூபி ஆறு முறை சீரமைக்கப்பட்டாலும், அதன் உச்சிப் பகுதியில் இதுவரை எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.[9] கிபி 640ல் இந்தியாவிற்கு யாத்திரை செய்த சீன பௌத்த அறிஞர் யுவான் சுவாங் தமது பயணக் குறிப்பில், தமோக் தூபி வளாகம் அருகே 1,500 பிக்குகள் தங்கியிருந்ததாகவும், தமோக் தூபி 300 அடி உயரத்துடன் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.[10]

கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட உருளை வடிவ தமோக் தூபி தற்போது 43.6 மீட்டர் உயரமும், 28 மீட்டர் விட்டமும் கொண்டது.[11]அசோகர் காலத்தில் நிறுவப்பட்ட தூபியின் கட்டிட அமைப்பில், குப்தப் பேரரசு காலத்தில் முழுவதும் சீரமைத்து, பூவேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டது. தூபியின் சுவர்களில் பிராமி எழுத்துமுறையில் கல்வெட்டுகளும், மனிதர்கள், பறவைகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளது.[12]

1891ல் தமோக் தூபி

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dhamekh Stupa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 1. "Dhamekh Stupa Sarnath, Varanasi India". iloveindia.com.
 2. "Buddhist Art and Architecture: Symbolism of the Stupa / Chorten". 2006-08-14. பார்க்கப்பட்ட நாள் 2013-01-07.
 3. "THE BUDDHIST STUPA: ORIGIN AND DEVELOPMENT". 2005-01-13. Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2013-01-07.
 4. Possehl, Gregory L (2010). The Indus Civilization: A Contemporary Perspective. AltaMira. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0759101722. https://books.google.com/books?id=pmAuAsi4ePIC&pg=PA12&dq=Mohenjo-daro+buddhist+stupa&hl=en&sa=X&ei=sEmAVOeYHKTn7gb0m4DQAw&ved=0CCIQ6AEwAA#v=onepage&q=Mohenjo-daro%20buddhist%20stupa&f=false. 
 5. Sir Banister Fletcher's a History of Architecture, 20th ed. (ed. by Dan Cruickshank). Architectural Press, 1996. ISBN 0-7506-2267-9. Page 646.
 6. "Stupas". Indian Heritage. Archived from the original on 2007-01-08. பார்க்கப்பட்ட நாள் 2006-11-20.
 7. "Place of the Buddha's First Sermon". Indian architecture. Archived from the original on 2006-08-28. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19.
 8. "http://www.asia.msu.edu/southasia/india/culture/architecture.html". Archived from the original on 2006-09-01. பார்க்கப்பட்ட நாள் 2007-02-08. {{cite web}}: External link in |title= (help)
 9. Bradnock, Robert W. Footprint India. Footprint Travel Guides, 2004. ISBN 1-904777-00-7. Page 191.
 10. Arnett, Robert A. India Unveiled. Atman Press, 2006. ISBN 0-9652900-4-2.
 11. "Dhamekh Stupa". Varanasicity.com. பார்க்கப்பட்ட நாள் 2006-10-16.
 12. "Dhamekh Stupa". பார்க்கப்பட்ட நாள் 2006-09-19.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமேக்_தூபி&oldid=3640188" இலிருந்து மீள்விக்கப்பட்டது