ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப்
பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம்
மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.[3] சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.
சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் நிறம் சிவப்பு. புற்று நோயை குணப்படுத்திடவும், புண் மற்றும் காயங்களை ஆற்றிடவும் பெரிதும் உதவுகின்றது இந்நிறம். மேலும் இந்நிறம் குளிர் பாகங்களில் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்பட்டுள்ள வலியினைக் குறைத்திட உதவிடும். இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வினை நீக்கி தெளிவு அளிக்கும் வலிமை பெற்றது சிவப்பு நிறம்.[4]
சிவப்பு வலிமையையும் துணிச்சலையும் ஆண்மை, ஆற்றல் ஆகியவற்றையும் குறிக்கும் நிறமாகக் கருதப்படுகிறது. தூண்டுதலை உண்டாக்குகிறது. ஒரு அறையில் உள்ள பொருட்களில் சிவப்பு வண்ணப் பொருள்தான் நமது கவனத்தினை முதலில் ஈர்க்கிறது. எனவேதான் போக்குவரத்து சைகைகள், அபாய எச்சரிக்கைகள் முதலியவை சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகின்றன. 'செய் அல்லது செத்து மடி' என்ற உணர்வை உண்டாக்குவதும், நேரம் வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிப்பதும் சிவப்பின் பிற தன்மைகள்[5].