ஊதா (Violet) என்பது நீலம் கலந்த கருஞ்சிவப்பு (purple) நிறத்தைக் குறிக்கும் ஒரு நிறமாகும். இது Violet என்றழைக்கப்படும் ஒரு பூக்கும் தாவரத்தின் பெயரை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது.

ஊதா
Color icon violet v2.svg
— நிறமாலைக் குறி எண்கள் —
அலைநீளம் 380–450 nm
அதிர்வெண் 785–665 THz
About these coordinatesAbout these coordinates
— Color coordinates —
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source [Unsourced]

அறிவியல் அடிப்படையில் ஊதாதொகு

ஒளியியல்தொகு

நிறமாலை இல் உள்ள கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களில் இது இறுதி நிறமாகும், அதாவது விலகல் கூடிய நிறமாகும். இது நிறமாலையில் நீலத்திற்கும் கண்களுக்குப் புலப்படாத புற-ஊதாக் கதிரிற்கும் இடையில் அமைந்துள்ளது. இது மற்றைய கண்களுக்கு புலப்படக்கூடிய நிறங்களிலும் குறுகிய அலைநீளத்தைக் கொண்டது. இதன் அலை நீளம் 380 மற்றும் 450 நனோமீற்றர்கள் ஆகும்.

ஓவியர்களால் பின்பற்றப்படும் மரபுவழி வண்ணச் சக்கரத்திலும் கூட நீலத்திற்கும் சிவப்புக்கும் இடையில் தான் ஊதா அமைந்துள்ளது. ஆகவே தான் ஊதா நிறம் சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கலப்பதனூடாகப் பெறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊதா&oldid=2979036" இருந்து மீள்விக்கப்பட்டது