சாம்பல் (Ash) என்பது நெருப்பின் திட எஞ்சல்கள் ஆகும்[1]. குறிப்பாக, இது ஒரு பொருள் எரிக்கப்பட்ட பின் உண்டாகும் அனைத்து நீர்மமற்ற, வாயுவல்லாத எச்சங்கள் எனக் குறிக்கப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியல் படி, இரசாயன மாதிரிகளின் கனிம மற்றும் உலோக உள்ளடக்கத்தை ஆய்வு செய்யய் பயன்படும் சாம்பல் முழுமையான எரிப்பு பிறகு உண்டாகும் வாயு அல்லாத, திரவம் அல்லாத எச்சம்.

மரச் சாம்பல்

முழுமையற்ற எரிதலின் இறுதி பொருளாக உள்ள சாம்பல் பெரும்பாலும் கனிமமாக இருக்கும், ஆனால் வழக்கமாக எரியக்கூடிய கரிமம்அல்லது வேறு [[ஆக்சிஜனேற்றம்|ஆக்சிஜனேற்ற\\ எச்சங்களைக் கொண்டிருக்கும். முகாம்களில் ஏற்படுத்தும் நெருப்பு, விறகுகளை எரித்தல் மேலும் பல காரணங்களால் ஏற்படும் மரச் சாம்பல் நன்கு அறியப்பட்ட சாம்பல் வகையாகும். அதிக அடர் நிறத்தில் உள்ள மரச் சாம்பல், முழுமையாக எரியப்படாத, அதிக கரியளவு கொண்டுள்ளது என்பதைக் குறிக்கும்.

சோப்பு போன்று, சாம்பல் ஒரு கிருமி நீக்கம் செய்யும் முகவர் (அல்கலைன்)[2]. உலக சுகாதார நிறுவனம் சோப்பிற்கு மாற்றாக (சோப்பு கிடைக்காத போது) சாம்பல் அல்லது மணலை பரிந்துரைக்கிறது[3].

குறிப்பிட்ட வகைகள்

தொகு
 • மரச் சாம்பல் நிலக்கரி எரிப்பு தயாரிப்புகள்.
 • கீழ் சாம்பல்.
 • பறக்கும் சாம்பல், நிலக்கரி எரிவதால் உண்டாகும்.
 • நகர்ப்புற குப்பைக்கூளம் எரிவதால் காற்றில் உண்டாகும் சாம்பல்
 • சிகெரட் சாம்பல், சிகெரட் புகைபிடிப்பதால் உண்டாகும் சாம்பல்·        
 • நீற்றுலை கீழ் சாம்பல், நீற்றுலை பயன்பாட்டால் உண்டாகும் சாம்பல்.
 • விபூதி, இந்து சடங்குகளில் பயன்படுத்தப்படுத்தப்படும் சாம்பல்.
 • சாம்பல் மற்றும் உலர்ந்த எலும்பு துண்டுகள், தகனம் செய்வதால் உண்டாகும் சாம்பல்.
 • எரிமலைச் சாம்பல், கண்ணாடி, பாறை, மற்ற தாதுக்கள் கொண்ட சாம்பல் சாம்பல், எரிமலை வெடிப்பின் போது தோன்றும்.

மேலும் காண்க

தொகு
 • சாம்பல் கொண்டது, சாம்பல் நிறம் அல்லது சாம்பல் போன்றது

மேற்கோள்

தொகு
 1. "the definition of ash". www.dictionary.com. Retrieved 2018-06-18.
 2. [1][தொடர்பிழந்த இணைப்பு] Howard et al. 2002: Healthy Villages A guide for communities and community health workers. CHAPTER 8 Personal, domestic and community hygiene. WHO. Accessed Oct
 3. WHO 2014: Water Sanitation Health. How can personal hygiene be maintained in difficult circumstances? Accessed Oct. 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்&oldid=3243645" இலிருந்து மீள்விக்கப்பட்டது