திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில்
திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 10வது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | பரம்பைக்குடி, திருஆலம்பொழில், திருவாலம்பொழில், திருவாம்பொழில் |
பெயர்: | அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாலம்பொழில், திருவாம்பொழில் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர் |
தாயார்: | ஞானாம்பிகை. |
தல விருட்சம்: | ஆல் (ஆல மரம் இப்போதில்லை) |
தீர்த்தம்: | காவிரி |
ஆகமம்: | சிவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | அப்பர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
தல வரலாறுதொகு
இத்தலத்தின் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.
குடமுழுக்குதொகு
இக்கோயிலில் 4 சூன் 2017 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை பூசைகள் ஆரம்பிக்கப்பட்டன. [1]
சிறப்புகள்தொகு
- காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டு பேறு பெற்ற சிறப்புடையத் தலம்.
திருத்தலப் பாடல்கள்தொகு
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
கமலத்தோன் றலையரிந்த கபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.