மொட்டு
மொட்டு (bud) என்பது தாவரத்தின் முக்கியமான பகுதியாகும். மொட்டானது இலைக்கோணத்திலோ அல்லது தண்டின் நுனியிலோ தோன்றும் வளர்ச்சியடையாத கருத்தண்டு ஆகும். ஒருமுறை உருவாகிய மொட்டு சில நாட்களுக்கு பின்னர் செயலற்ற நிலைமையிலிருந்து தண்டுத் தொகுதியாக வளர்ச்சியடையக்கூடும். மொட்டுகளானது சிறப்பு வளர்ச்சி பெற்று மலர்களின் உருவாக்கத்திலோ அல்லது பொதுவான தண்டு உருவாக்கத்திலோ பங்கு வகிக்கிறது. விலங்கியலில் மொட்டு என்ற சொல் விலங்கின் உடல இனப்பெருக்கத்திற்காக தோன்றும் புதிய தனி உயிரிகளை தோற்றுவிக்கும் அமைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
மொட்டுகளின் வகைகள்
தொகுதாவரங்களை அடையாளம் காண்பதில் மொட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக குளிர்காலங்களில் இலைகள் உதிர்ந்த பின்னர் மொட்டுகள் உண்டாகும்.[1]. மொட்டுகளை அது உருவாகும் இடம், நிலை, அமைப்பு, மற்றும் செயல்பாடு ஆகியவற்றை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.
உருவாகும் இடத்தைப் பொருத்து வகைப்பாடு
தொகுமொட்டுகள் உருவாகும் இடத்தைப் பொருத்து மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை
- நுனி மொட்டு - தண்டின் நுனியில் உருவாகும் மொட்டு
- கோண மொட்டு - இலைக்கோணத்தில் உருவாகும் மொட்டு
- வேற்றிடத்து மொட்டு - வேர் அல்லது இடம் மாறி உருவாகும் மொட்டுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Trelease, W. (1967) [1931], Winter botany: An Identification Guide to Native Trees and Shrubs, New York: Dover Publications, Inc, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0486218007