குல தெய்வ வழிபாடு
குல தெய்வ வழிபாடு, பெரும்பாலும் ஒன்று அல்லது பல குடும்பங்கள், குலம், கோத்திரம் ஆகியவற்றிலால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இது இஷ்ட தெய்வம், மற்றும் கிராமக் காவல் தெய்வம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. குலதெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில், குழுவினரில், ஒவ்வொரு சாதிப் பிரிவினரில் தோன்றி, தங்கள் குலம் செழிக்கப் பாடுபட்டு, தியாகம் புரிந்து, இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர். குலதெய்வம் என்பது புராணத் தொடர்பு கொண்ட தெய்வங்களாக பெரும்பாலும் அமைவதில்லை. குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களாகவும், நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களையே நாம் குல சாமிகளாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். மதுரை வீரன், கருப்பண்ணசாமி, செல்லியம்மன் முதலான தெய்வங்களெல்லாம் எப்போதோ மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய நம் முன்னோர்களின் சிலைகளைக் குல தெய்வங்களாகப் போற்றி வழிப்படப்படுகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வம் கொண்டுள்ளது. குல தெய்வத்தை வழிபடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள் முழுவதும் அண்ணன், தம்பி உறவு முறை பங்காளிகளிகள் ஆவார். எனவே இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டார்கள்.[1][2]
பிறக்கும் குழந்தைகளுக்கு, குலதெய்வம் கோயிலில் முதல் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். சிலர் காது குத்துவார்கள். மேலும் வீட்டில் எந்த சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு முன்னர், முதலில் குலதெய்வ வழிபாடு நடத்திவிட்டுத்தான் துவக்குவார்கள். மேலும் ஆண்டுதோறும் குலதெய்வ வழிபாடு நடத்துவதால் வீட்டில் நன்மையும், மகிழ்ச்சியும் நிலவும் என்பது தொன்ம நம்பிக்கையாகும்.
வழிபாட்டுக் காலம்
தொகுகுல தெய்வ வழிபாட்டை மாசி மாத மகா சிவராத்திரி அல்லது பங்குனி உத்தரம் நாளில் மேற்கொள்வது சிற்ப்பு எனக்கருதப்படுகிறது.[3] வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து உண்ட பின் வீடு திரும்புவது குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.
குல தெய்வ வழிபாட்டு முறைகள்
தொகுகுல தெய்வ வழிபாட்டில் நான்கு முறைகள் உள்ளது. 1. உருவ வழிபாடு மற்றும் உருவமில்லா வழிபாடு 2. ஆயுதங்களை வைத்து வழிபடுவது, நினைவுப் பொருட்களை வைத்து வழிபடுவது. 3. ஆண்கள் மட்டும் வழிபடுவது. 4. இரவில் ஆண்கள் மட்டும் வாயைக் கட்டிக் கொண்டு பூஜை செய்வது.