நாகர்கள், புராணம்

நாகர்கள் (Nāga) (IAST: nāgá; சமஸ்கிருதம்: नाग) சமணம் மற்றும் இந்து சமய புராணங்களில் தெய்வீக சக்தியுள்ள தேவதைகளாக நாகப்பாம்புகள் கருதப்படுகின்றன. ஆண் பாம்புகள் நாகர்கள் என்றும் பெண் பாம்புகள் நாகினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1] தேவர்களின் அரசனான இந்திரன், நாகர்களின் நண்பர் ஆவார். பல்லாண்டுகளாக நாக வழிபாடு இந்து சமய வழக்கமாக உள்ளது. நாகங்களை சர்ப்பம் என்றும் அழைப்பர். தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெற திருப்பாற்கடலில், மந்தர மலையை நிறுவிக் கடைவதற்கு வாசுகியைக் கயிறாகப் பயன்படுத்தினர். நாகர்களின் இருப்பிடம் பாதாள லோகம் எனப்படுகிறது. இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் நாக பஞ்சமி அன்று நாக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.[2]

நாகர்கள்
नाग
போசளப் பேரரசு காலத்திய ஹளபேட்டில் நாக இணையர்களின் சிற்பம்
குழுபுராண கால உயிரினங்கள்
உப குழுபாம்பு தேவதைகள், நீர் தேவதைகள்
ஒத்த உயிரினம்டிராகன்
மூலம்காசிபர் - கத்ரு
தொன்மவியல்இந்து புராணங்கள்
நாடுபரத கண்டம்
பிரதேசம்தெற்காசியா, தென்கிழக்காசியா
வாழ்விடம்ஆறுகள், ஏரிகள், காடுகள் மற்றும் குகைகள், பாதாள உலகம்

புராண & மகாபாரதக் குறிப்புகள் தொகு

ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி

காசிபர் - கத்ரு இணையருக்கு பிறந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாகங்களில் அதிக சக்தி உடையவர்களில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், மானசா, கார்க்கோடகன் மற்றும் குளிகன் ஆவர்.

தீயிட்டு அழித்து காண்டவப்பிரஸ்தம் நகரை உருவாக்க காரணமான அருச்சுன்னை பழி வாங்க தட்சகனும் அவர் மகனும் குருச்சேத்திரப் போர் வரை கர்ணனை ஊக்குவித்தனர். நாகங்களை கொல்வதற்கான ஜனமேஜயனின் நாக வேள்வியில், நாகங்களின் சகோதரியான ஜரத்காருவிற்கு பிறந்த ஆஸ்திகர் என்ற இளம் வயது முனிகுமாரன் காப்பாற்றி விடுகிறார்.[4]

நாகர் - கருடர்கள் இனப் போராட்டம் தொகு

காசிபர் முனிவருக்கும் - வினதாவுக்கும் [5] பிறந்த கருடப் பறவைகள், நாகர்களின் பிறவிப் பகைவர்கள் ஆவார். ஒரு முறை நாகர்களின் தாயான கத்ருவிடம் அடிமைப்பட்ட கருடப் பறவைகளின் தாய் வினதையை பெரும் முயற்சியால் கருடன் விடுவித்தார்.[6]

இந்து சமயத்தில் நாக வழிபாடு தொகு

தென்னிந்தியாவில் நாக வழிபாடு
 
தென்னிந்தியாவில் நாகப் பிரதிட்டை

நாகங்கள் சிவனின் அணிகலன்களாகவும், விஷ்ணுவின் படுக்கையாகவும் காட்சியளிக்கிறது. நாகங்கள் தொடர்பான கதைகள் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் நேபாள நாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் நாகங்கள் நல்ல மழை வளம், இனப்பெருக்கம், வெள்ளம், பஞ்சம் ஆகியவற்றுக்கு காரணமானவர்கள் என்றும், ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை காப்பவர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. இந்து நம்பிக்கைகளின் படி நாகங்களை கொன்றால் அல்லது காயப்படுத்தினால் அவைகளால் மனிதர்களுக்கு தீயது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், பெரும்பாலும் வீடுகளில் பாம்புகள் வந்தாலும், அதனைக் கொல்லாமல், பிடித்து காட்டிற்குள் விட்டு விடுவார்கள்.

ஜாதகத்தில் நாக தோசம் உள்ளவர்கள், அதனை நீக்க நாகத்தை பிரதிட்டை செய்து நாக வழிபாடு செய்வதால் மகப்பேறு, செல்வம் பெறுவதுடன் காரியத் தடைகளும் நீங்கப்படுகிறது என நம்புகிறார்க்ள். .[7]

தென்னிந்தியாவில் குழந்தை பேறு கிடைக்க வேண்டி, அரசமரமும், வேப்ப மரமும் ஒருசேரக் கூடிய இடத்தில் பிள்ளையாரைச் சுற்றியுள்ள நாக தேவதைகளுக்கு பால், முட்டை போன்றவைகள் படையலிட்டு நாகங்களை வழிபடும் பழக்கம் பல்லாண்டுகளாக உள்ளது.[8]

நாக இன மக்கள் தொகு

கேரளா மாநிலத்தின் நாயர் சமூகத்தினர் தங்களை நாகர்களின் வழித்தோன்றல்கள் எனக் அழைத்துக் கொள்கின்றனர். மேலும் இந்தியாவின் நாகலாந்து மாநில மக்கள் தங்களை நாகர் இன மக்கள் என அழைத்துக் கொள்கின்றனர்.

ஊடகங்களில் தொகு

ஊடகங்களில் நாக தேவதைகள் தொடர்பான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nāga
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க தொகு

  • Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கள்,_புராணம்&oldid=3791946" இருந்து மீள்விக்கப்பட்டது