சனமேசயன்

(ஜனமேஜயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பேரரசன் ஜனமேஜயன் (சமஸ்கிருதம்: जनमेजय) இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் பரீட்சித்து மன்னனின் மகனும், அபிமன்யுவின் பேரனும், அருச்சுனனின் கொள்ளுப்பேரனும் ஆவான்.

சர்ப்ப வேள்வியில் சனமேசயனும் தம்பியரும்

குரு வம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. [1]

வியாச முனிவரின் மாணவனான வைசம்பாயனரால் மகாபாரத இதிகாசம் பரிசித்துவிற்குச் சொல்லப்படும் போது, அங்கிருந்த சூத முனிவரான உக்கிரசிரவசும் கேட்டார். பின்னர் உக்கிரசிரவஸ், நைமிசாரண்யத்தில் உள்ள சௌனகாதி முனிவர்களுக்கு மகாபாரத இதிகாசத்தை எடுத்துக் கூறினார். இவனுக்கு ஆதிசிம கிருஷ்ணன் என்ற மகனும் உண்டு.

மகாபாரதம்

தொகு

மகாபாரதத்தில், ஜனமேசயனுக்கு ஆறு தம்பியர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், காக்சசேனன், உக்கிரசேனன், சித்திரசேனன், இந்திரசேனன், சுசேனன், நாக்கியசேனன் என்போராவர் என்று ஆங்கில விக்கியில் மேற்கோளுடன்[2]இருக்கிறது. மகாபாரதத்தின் ஆதிபர்வம் 3ம் பகுதியில் சுரூதசேனா, உக்ரசேனா, பீமசேனா ஆகியோர் அவனுடன் பிறந்த மூன்று தம்பிகளாவர் என்ற குறிப்பே இருக்கிறது.[3], [4] மகாபாரதத்தின் தொடக்கப் பகுதிகளில் சனமேசயனின் வாழ்க்கை தொடர்பான பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தக்சசீலத்தைக் கைப்பற்றியதும், தட்சகன் என்னும் பாம்பரசனுடனான சண்டையும் அடங்குகின்றன. இவனது தந்தையான பரீட்சித்துவின் இறப்புக்குத் தக்சகன் காரணமாக இருந்ததால், அவன் நாக இனத்தையே அழிப்பதில் குறியாக இருந்தான்.

மேலும் உத்தங்கர் தூண்டுதல் காரணமாகவும் சர்ப்ப சத்ரா வேள்வி யை நடத்த ஏற்பாடுகள் செய்கிறான். நாக அரசன் தட்சகன் நாக வேள்வியில் விழுந்து இறக்கும் தருவாயில், நாககன்னி ஜரத்காருவுக்குப் பிறந்த ஆஸ்திகர் அவனது வெறித்தனமான பாம்புகள் அழிப்பை தடுக்கிறார். அப்போது அங்கு வரும் வேதவியாசர், , ஒரு சாபத்தினை நிறைவேற்றவேண்டி ஒருவர் இயற்றிய செயலுக்காக, அந்த இனத்தவரையே அழிப்பது அறமாகாது என்றும் பாண்டவர் வழித்தோன்றலுக்கு இது அழகல்ல எனவும் எடுத்துச் சொல்ல, நாக வேள்வியை கைவிடுகிறான். தனது முன்தாதையர்கள் பற்றி அறிய விரும்பிய சனமேசயனுக்கு, வியாசர் தனது சீடர் வைசம்பாயனரிடம் மகாபாரதக்கதையை அதே வேள்வி நடந்த இடத்தில் சொல்லப்பணிக்கிறார்.

மேற்கோள்

தொகு
  1. http://www.jeyamohan.in/43847#.VWydec-qqkp
  2. Journal of the Department of Letters by University of Calcutta (Dept. of Letters),Publ.Calcutta University Press, 1923, p2
  3. "தமிழ் மஹாபாரதம்"
  4. "Mahabharata Adiparva section 3 of Kisari Mohan Ganguli in english"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனமேசயன்&oldid=3801526" இலிருந்து மீள்விக்கப்பட்டது