சௌனகர் (சமக்கிருதம்: शौनक) அதர்வண வேத கால முனிவர். சமசுகிருத இலக்கண ஆசிரியர்களில் ஒருவர். நால்வகை ஆசிரமங்களை அறிமுகப்படுத்தியவர்.[1] இவர் ரிஷி கூட்டங்களின் தலைவர் என்பதால் குலபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

நைமிசாரண்யம் காட்டில் குலபதி சௌனகர் தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்

மகாபாரதத்தில்

தொகு

நைமிசாரண்ய காட்டில், குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, கதை சொல்லியான உக்கிரசிரவஸ் என்ற சௌதி (சூதர்) மகாபாரதத்தை எடுத்துரைத்தார். [2]

கௌரவர்களிடம் சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்கள் காடுறை வாழ்வின் போது, சௌனகர், பாண்டவர்ளைத் தேற்ற அறம் மற்றும் சுய விடுதலையில் முனைப்புடன் இருக்கும் ஞானமுள்ளோர் கையாளும் வழிகள் குறித்து அறிவுரை வழங்கினார். [3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. (English)Mangaldeva Śāstri, The Rgveda-prātiśākhya with the commentary of Uvaṭa by Śaunaka.; Vaidika Svādhyāya Mandira, Varanasi Cantt.,1959 ,OCLC: 28723321
  2. (English)Mangaldeva Śāstri, The Rgveda-prātiśākhya with the commentary of Uvaṭa by Śaunaka.; Vaidika Svādhyāya Mandira, Varanasi Cantt.,1959 ,OCLC: 28723321
  3. சௌனகர் உபதேசம் - வனபர்வம் பகுதி 2 அ
  4. சௌனகர் உபதேசம் - வனபர்வம் பகுதி 2 ஆ
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌனகர்&oldid=3725110" இலிருந்து மீள்விக்கப்பட்டது