நாயர்
நாயர் (மலையாளம்: നായര്) என்றழைக்கப்படுவோர் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தில் வசிப்பவர்கள். நாயர்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். நம்பூதிரிகளுடன் திருமண உறவு வைத்துக் கொள்பவர்கள். நாயர்கள் தாய்வழி (மருமக்கதாயம்) சமூகத்தினர் ஆவர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(5,000,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தாய் மொழி: மலையாளம் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சமபந்த சத்திரியர், பந்த், நம்பூதிரி |
முந்தைய திருவிதாங்கூர் வரலாறு
திருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை நம்பூதரி மட்டும் தங்க ஆபரணம் அணியலாம். , நாயர், ஈழவர்,வெள்ளாளர், போன்ற பிற சமூக மக்கள் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் நாயர் சமூக மக்கள் தங்க ஆபரணங்கள் அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.