சுருதி
சுருதி (சமற்கிருதம்: श्रुति) எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது கேள்வி என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.
முக்கியத்துவம்
தொகுநாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியைத் தாய் என்றும் லயத்தைத் தந்தை என்றும் சொல்வர்.
வகைகள்
தொகுசுருதி இரு வகைப்படும். அவையாவன:
- பஞ்சம சுருதி - இது மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது;
- மத்திம சுருதி - இது மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.
சாதாரணமாகப் பாட்டுகள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாகச் சுருதி சேர்க்கும் பொழுது சா-பா-சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.
சுருதிக்குப் பயன்படும் கருவிகள்
தொகுசுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.
சுருதி மற்றும் அதன் அதிர்வெண்கள் (இந்துஸ்தான் இசையில் கூறியவாறு)
தொகுசுருதி பெயர் | ஸ்வரம் | விகிதாச்சாரம் | சுருதி அதிர்வெண் |
---|---|---|---|
க்ஷோபீனி | ஷட்ஜா | 1 | 466.1638 |
திவ்ற | கோமல் ரிஷப் | 256/243 | 491.1026 |
கும்தாவதி | 16/15 | 497.2414 | |
மண்ட | 10/9 | 517.9598 | |
சந்தோவதி | ஷுத்த ரிஷப் | 9/8 | 524.4343 |
தயாவந்தி | கோமல் கந்தர் | 32/27 | 552.4904 |
ரஞ்சனி | 6/5 | 559.3966 | |
ரக்திகா | 5/4 | 582.7048 | |
ருத்ரி | ஷுத்த கந்தர் | 81/64 | 589.9886 |
குரோதி | ஷுத்த மத்யம் | 4/3 | 621.5517 |
வஜ்ரிக | 27/20 | 629.3211 | |
பிரசரிணி | திவ்ற மத்யம் | 45/32 | 655.5428 |
ப்ரிதி | 729/512 | 663.7371 | |
மர்ஜானி | பஞ்சம் | 3/2 | 699.2457 |
க்ஷிதி | கோமல் தைவத் | 128/81 | 736.6539 |
ரக்த | 8/5 | 745.8621 | |
சண்டிபிணி | 5/3 | 776.9397 | |
அளபினி | ஷுத்த தைவத் | 27/16 | 786.6514 |
மட்னி | கோமல் நிஷாத் | 16/9 | 828.7356 |
ரோகினி | 9/5 | 839.0948 | |
ரம்யா | 15/8 | 874.0571 | |
உக்ர | ஷுத்த நிஷாத் | 243/128 | 884.9828 |
க்ஷோபீனி | ஷட்ஜா | 2 | 932.3276 |