பிரணாம்
இந்து சமயத்தில் இறைவனையும், குருமார்களையும், பெரியவர்களையும் வணங்கும் முறைக்கே சமஸ்கிருத மொழியில் பிரணாம் (Pranama) (Pranāma, प्रणाम) [1] என்பர்.
சொற் பிறப்பு
தொகுசமசுகிருத மொழியில் பிரணாம் என்ற சொல்லில் உள்ள பிர (pra) (: प्र) மற்றும் ஆணம் (Anama) (आनम); என்பதில் பிர என்பதற்கு (இறைவன்) முன் என்றும் ஆணம் என்பதற்கு தரையில் விழுந்து அல்லது குனிந்து வணங்குதல் எனப் பொருள். [2] வட மொழியில், பெரியவர்களையும், குருமார்களையும், இறைவனையும் வணங்கும் முறையே பிராணம் என்பர்.
வணக்க முறைகள்
தொகுஇந்துக்களின் பண்பாட்டில் ஆறு வகையான பிரணாம் அல்லது வணக்கம் தெரிவிக்கும் முறைகள் உள்ளன:[3]
- அஷ்டாங்கம் - கால்கள், வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி மற்றும் தலை ஆகிய எட்டு உறுப்புகள் (அஷ்டாங்கம்) தரையில் படுமாறு கோயிலில் இறைவனை வணங்கும் முறையாகும்.
- சாஷ்டாங்கம் - கால் விரல்கள், முழங்கால்கள், கைகள், மார்பு, முகவாய்க்கட்டை (தாடை) மற்றும் மூக்குப் பகுதிகள் தரையில் படுமாறு விழுந்து வணங்குதல்.
- பஞ்சாங்கம் - முழங்கால்கள், மார்பு, தாடை மற்றும் நெற்றி ஆகிய உறுப்புகள் தரையில் படுமாறு விழுந்து வணங்குதல்.
- தண்டவடாம் - குனிந்து முன்னந்தலை தரையில் படுமாறு வணங்குதல்
- நமஸ்காரம் - நெற்றியில் இருகை கூப்பி வணங்குதல்
- அபிநந்தம் - இரு கைகளை மார்பில் தொட்டு, குனிந்து வணங்குதல்
தொடர்புடைய வணக்க முறைகள்
தொகுபிராணம் எனும் வணக்க முறைகளில் சரணம்-ஸ்பர்சம் charaṇa-sparśa, எனப்படும் காலைத் தொட்டு வணங்கும் முறை ஒன்றாகும்.
வட இந்திய இந்து மக்களிடையே நமஸ்காரம் செய்தலே பொதுவான வணக்க முறையாகும். [3][4]
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Pranama Himalayan Academy, pp. 481
- ↑ Apte Dictionary, See: pra, aanama
- ↑ 3.0 3.1 Chatterjee, Gautam (2001), Sacred Hindu Symbols, Google books, pp. 47–48.
- ↑ Bhatia, S., & Ram, A. (2009). Theorizing identity in transnational and diaspora cultures: A critical approach to acculturation. International Journal of Intercultural Relations, 33(2), pp 140-149