பித்ருக்கள்

இந்து கலாச்சாரத்தில் மறைந்த முன்னோர்களின் ஆவிகள்

பித்ருக்கள் ( Pitrs : पितृ, தந்தையர்) என்போர் இந்து கலாச்சாரத்தில் மறைந்த முன்னோர்களின் ஆவிகள் ஆவர். அவர்கள் அடிக்கடி ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறார்கள்.

பஞ்சாபி நாட்டார் சமயத்தில், ஜெய்ஸ்தா (மூத்தவர்), தஹக் (புனித நெருப்பு), அர் சமாதி (கோயில்கள்) ஆகியவை மூதாதையர்களின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

மனித பித்ருக்களும், தெய்வீக பித்ருக்களும்

தொகு

பித்ருக்கள் பற்றிய மிக முழுமையான கணக்குகள் வாயு புராணத்திலும் பிரம்மாண்ட புராணத்திலும் காணப்படுகின்றன]]. மேலும், இவர் இரண்டும் நடைமுறையில் ஒரே மாதிரியானவை. அரி வம்சத்தில் உள்ள கணக்கு சிறியது. ஆனால் அவைகளுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது. இதே போன்ற ஆனால் சுருக்கமான கணக்குகள் மச்ச புராணத்திலும், பத்ம புராணத்திலும் காணப்படுகின்றன. பித்ரு என்பதில் வெவ்வேறு வகைகள் உள்ளன. மேலும் அவை வெவ்வேறு தோற்றம், வடிவங்கள், தரங்கள், இருப்பிடங்களைக் கொண்டுள்ளன. தேவ பித்ருக்களுக்கும், மனிதர்களாய் இருந்து இறந்த பித்ருக்கள் ஆகியோரிடையே ஒரு பரந்த வேறுபாடு உள்ளது. பித்ருக்களில் சிலர் பரலோக வாழிடங்களில் வசிக்கிறார்கள், மற்றவர்கள் பாதாள உலகில் வசிக்கிறார்கள்.

தேவ பித்ருக்கள் மிகவும் பழமையான நற்பண்புகள் கொண்டவர்கள். மேலும், அவர்கள் ஒருபோதும் அழிய மாட்டார்கள். மனித பித்ருக்கள் தேவ பித்ருக்களின் அதே நிலையை அடைந்து அவர்களுடன் சொர்க்கத்தில் நேர்மையாக வாழ முடியும்..

அவர்கள் ஒவ்வொரு ஆயிரம் மகாயுகங்களின் முடிவிலும் மீண்டும் பிறந்து உலகங்களை உயிர்ப்பிக்கிறார்கள். அவர்களிடமிருந்து அனைத்து மனுக்களும் புதிய படைப்பில் உள்ள அனைத்து சந்ததிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]

தெய்வீக பித்ருக்களின் ஏழு வகுப்புகள்

தொகு

தேவ பித்ருக்களில் ஏழு வகைகள் உள்ளன. அவற்றில் மூன்று உடலற்றது (அமுர்தயம்). மற்ற நான்கும் உடலியல் (சமுர்த்தயம்) ஆகும். பித்ருக்களின் மூன்று நிராகார ஆணைகள் வைரராஜாக்கள், அக்னிசுவத்தர்கள், பர்கிசதாக்கள். பித்ருக்களின் நான்கு உடல் வரிசைகள் சோமபாஸ், அவிஷ்மனாஸ், அஜ்யபாஸ் மற்றும் சுகலின்ஸ் (அல்லது மானசஸ்) ஆகும்.

பித்ருக்களின் பரம்பரை

தொகு

தெய்வீக பித்ருக்களின் ஏழு வகுப்புகளுக்கும் ஒவ்வொரு மானசி கன்யா (மனதில் பிறந்த மகள்) இருந்தனர். இமயமலையின் மனைவியான மேனா வைரராஜாவின் மகள். அச்சோதா நதி அக்னிஷ்வத்தர்களின் மகள். சுகர் முனிவரின் மனைவி பிவாரி பர்கிசதாசின் மகள். நருமதை ஆறு சோமபாவின் மகள். யசோதா அவிசமனாசின் மகள், விசுவமகத்தின் மனைவி மற்றும் திலீபனின் தாயார். மன்னன் நகுசனின் மனைவி விரஜா, அச்யபாசின் மகள். மேலும், சுக்ராச்சாரியாரின் மனைவியான கோ அல்லது எச்ரிங்கா மானசசின் மகள். [2]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Pargiter, F.E (1922, reprint 1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, pp. 46-7
  2. Pargiter, F.E (1922, reprint 1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, p.69

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்ருக்கள்&oldid=3855084" இலிருந்து மீள்விக்கப்பட்டது