அரி வம்சம்
அரி வம்சம் அல்லது ஹரி வம்சம் (Harivamsha) பிராகிருதம் (Harivaṃśa हरिवंश), எனும் பண்டைய பிராகிருத மொழியில் எழுதிய நூல், 16,374 செய்யுட்களுடன் கூடியது. இந்நூல் ஹரி எனப்படும் விஷ்ணுவின் எட்டாவது அவதாரத்தை விளக்கும் புராண நூலாகும். ஹரி வம்சம், மகாபாரதத்தின் இணைப்பு நூலாக கருதப்படுகிறது.[1] இந்நூலை இயற்றியது வேத வியாசர் ஆவார். ஹரி வம்சம் ஆதி பருவம், விஷ்ணு பருவம் மற்றும் பவிஷ்ய பருவம் என மூன்று பருவங்களைக் கொண்டது.
முதலிரண்டு பருவங்கள் ஹரியின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரை குறித்து அதிக செய்திகள் கொண்டது. இந்த முதலிரண்டு நூல்கள் வைணவர்களால் அதிகம் போற்றப்படுகிறது.[2][3]
ஆதி பருவத்தில், கிருஷ்ணரின் பிறப்பு, இளமையை விளக்குகிறது. விஷ்ணு பருவம், மகாபாரதத்தில் பாண்டவர்களுடனான தொடர்புகள் விளக்குவதுடன், பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பகவத் கீதை உபதேசம் அருச்சுனனுக்கு அருளப்படும் செய்திகள் உள்ளது.[2]பவிஷ்ய பருவம், கலியுகம் தொடர்பான செய்திகள் விளக்கப்படுதுடன்,[4] உத்தவ கீதை உபதேசம் உத்தவருக்கு செய்திகள் அடங்கியது.
மேற்கோள்கள்தொகு
- ↑ The Mahabharata in Sanskrit: Book I: Chapter 2 in sacred-texts.com website
- ↑ 2.0 2.1 Maurice Winternitz (1981), History of Indian Literature, Vol. 1, Delhi, Motilal Banarsidass, ISBN 978-0836408010, pages 426-431
- ↑ Edwin Francis Bryant (2007), Krishna: A Sourcebook, Oxford University Press, ISBN 978-0195148923, Chapters 4-21
- ↑ Maurice Winternitz (1981), History of Indian Literature, Vol. 1, Delhi, Motilal Banarsidass, ISBN 978-0836408010, pages 432-435
வெளி இணைப்புகtள்தொகு
- Original Sanskrit text online with English translation
- Manmatha Nath Dutt, Vishnu Purana, English Translation of Book 2 of Harivamsa (1896)
- Alexandre Langlois, Harivansa: ou histoire de la famille de Hari, French Translation of Harivamsa (1834)
- Discourse on Harvamsha by Dr Vyasanakere Prabhanjanacharya
- ஹரிவம்சம் தமிழில்