கர்மங்கள்
கர்மங்கள் அல்லது செயல்கள் என்பது காம்ய கர்மம் (பயனை விரும்பும் செயல்கள்), நிசித்த கர்மம் (தவிர்க்க வேண்டிய செயல்கள்), நித்திய கர்மம், (அன்றாடம் கட்டாயமாக செய்ய வேண்டிய கடமைகள்) மற்றும் நைமித்திக கர்மம் (செய்ய வேண்டிய சமயச் சடங்குகள்), பிராயசித்த கர்மம் (செய்த பாவத்தை நீக்கும் பொருட்டு செய்யப்படும் கர்மங்கள்) என ஐந்து வகையான கர்மங்களை இந்து சமய வேதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்கள் வகைப்படுத்தியுள்ளது.[1]