நைமித்திக கர்மம்
நைமித்திக கர்மம் எனில் ஒரு நோக்கத்துடன் கூடிய அல்லது காரணத்துடன் கூடிய செயலே நைமித்திக கர்மம் ஆகும். ஏதாவது ஒரு தனிப்பட்ட நோக்கம் அல்லது காரணத்தினால் செய்யத் தக்க கர்மம் நைமித்திக கர்மம் ஆகும். எடுத்துக்காட்டு: வேதத்தில் கூறியவாறு குழந்தை பிறந்தவுடன் செய்ய ஜாதேஷ்டி யாகம் அல்லது ஜாதகர்மா மற்றும் உபநயனம் போன்ற கர்மங்கள் நைமித்திக கர்மங்கள் ஆகும். மேலும் அமாவாசை, பௌர்ணமிகளில் செய்ய வேண்டிய தர்சபூர்ணமாச யாகங்கள், சிரார்த்தம் போன்ற கர்மங்கள் நைமித்திக கர்மங்களின் வகைகள் ஆகும்.