பிராயசித்த கர்மம்

பிராயசித்த கர்மம் என்பது ஒரு மனிதன் தான் செய்த பாவத்தை நீக்கிக் கொள்வதற்கு அல்லது குறைத்துக் கொள்வதற்கு உறுதுணையாக உள்ள சாந்திராயணம் போன்ற யாகங்கள் செய்வதற்கு பிராயசித்த கர்ம்ம் என்பர். முற்பிறவியில் செய்த தீய செயலின் பலன்தான் பாவம் ஆகும். இப்பாவத்தின் விளைவுதான் துயரம், வேதனைகளை ஏற்படுத்துகிறது. பாவம் செய்தவன் அதன் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் எனில், வேதாந்த சாத்திரங்கள் வகுத்துள்ள பாவத்தை நீக்கும் பிராயச் சித்தக் கர்மங்களை செய்ய வேண்டும்.

`பிராய` எனில் தவம் ஆகும். `சித்தம்` எனில் நிச்சயம் அல்லது உறுதி ஆகும். பாவத்தை அகற்றுவதற்காகச் செய்யும் தவத்தின் உறுதியால் இதைப் பிராயச்சித்தம் என்று ஆங்கீரச ஸ்மிருதி விவரிக்கிறது.

தரும சாத்திர நூல்களில் பலவிதமான பாவங்களும் அதற்குரிய பிராயச்சித்தங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்: அகமர்ஷணம், அதிக்ருச்சரம், அர்த்தக்கிருச்சரம், கோவிரதம், சந்திராயணம் எனும் விரதங்களே பிராயச்சித்த கர்மங்கள்.

சந்திராயண விரதம் எனும் பிராயசித்த கர்மம் என்பது சந்திரனின் வளர்பிறை தேய்பிறை கலைகள் போன்று, பிராயசித்த கர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவன் தான் உண்ணும் உணவை பௌர்ணமியிலிருந்து சிறிது சிறிதாக குறைத்துக் கொண்டு, அமாவாசை நாளன்று முழு உண்ணாவிரதம் கடைப்பிடித்து, பிறகு அடுத்த நாள்முதல் பௌர்ணமி நாள் வரை உண்ணும் உணவை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதாகும்.

உதவி நூல்

தொகு
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1 [1]
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2 [2]
  • வேதாந்த சாரம், சுலோகம் 11 , நூலாசிரியர், சதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராயசித்த_கர்மம்&oldid=3913729" இலிருந்து மீள்விக்கப்பட்டது