திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி
திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி (Thiruvalaputhur T. A. Kaliyamurthy), அக்டோபர் 22, 1948 - பெப்ரவரி 19, 2020) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.
திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி | |
---|---|
இயற்பெயர் | அருணாசலம் கலியமூர்த்தி |
பிறப்பு | அக்டோபர் 22, 1948 |
பிறப்பிடம் | திருவாளப்புத்தூர், மயிலாடுதுறை, தமிழ்நாடு |
இறப்பு | பெப்ரவரி 19, 2020 | (அகவை 71)
இசை வடிவங்கள் | கர்நாடக இசை |
தொழில்(கள்) | தவில் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | தவில் |
இசைத்துறையில் | 1963 – 2020 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுதிருவாளப்புத்தூர் எனும் ஊரில் பிறந்தவர் கலியமூர்த்தி. பெற்றோர்: வி. அருணாசலம் பிள்ளை - ராஜாமணி அம்மாள். தவில் வாசிப்புக் கலையை தனது தாய்மாமா எஸ். கதிர்வேல் பிள்ளையிடம் 5 வயது முதல் 8 வயது வரை கற்றார். பின்னர் தனது தந்தை வழி தாத்தாவின் அண்ணனாகிய திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளையிடம் சிறப்புப் பயிற்சிப் பெற்றார். ஏழாண்டு காலப் பயிற்சிக்குப் பிறகு கச்சேரிகளில் வாசிக்கத் தொடங்கினார்.
இசை வாழ்க்கை
தொகுசிறப்புத் தவில் கலைஞராக முன்னணி நாதசுரக் கலைஞர்கள் திருவெண்காடு டி. பி. சுப்பிரமணிய பிள்ளை, திருவிழிமிழலை கோவிந்தராஜ பிள்ளை சகோதரர்கள், செம்பனார்கோயில் எஸ். ஆர். தட்சிணாமூர்த்தி பிள்ளை சகோதரர்கள், திருமெய்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், மதுரை சேதுராமன் பொன்னுசாமி, சேக் சின்ன மௌலானா, ஏ. கே. சி. நடராஜன் ஆகியோருக்கு வாசித்துள்ளார்.
சிறப்புகள்
தொகுதவில் இசை மாமணி
விருதுகள்
தொகு- கலைமாமணி விருது, 1981
- வலயப்பட்டி விருது, 2008[1]
மறைவு
தொகுடி. ஏ. கலியமூர்த்தி 2020 பெப்ரவரி 19 இல் மாரடைப்பால் காலமானார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "“Music festivals enrich our culture”". தி இந்து (ஆங்கிலம்). 24 டிசம்பர் 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/music-festivals-enrich-our-culture/article1400956.ece. பார்த்த நாள்: 18 ஆகஸ்ட் 2014.
- ↑ மு.க.ஸ்டாலின் இரங்கல்!, கலைஞர் செய்திகள், பெப்ரவரி 20, 2020
- ↑ "திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மாரடைப்பால் காலமானார்". NewsJ. 20 பெப்ரவரி 2020. Archived from the original on 2020-02-21. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help)