குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில்
திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 37-ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தேவாரம் பாடல் பெற்ற திருத்துருத்தி உத்தவேதீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருத்துருத்தி உத்தவேதீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | குத்தாலம் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | உத்தவேதீசுவரர் , சொன்னவாறு அறிவார் |
தாயார்: | அமிர்த முகிழாம்பிகை, மிருது முகிழாம்பிகை, பரிமளசுகந்த நாயகி, அரும்பன்னவன முலையாள் |
தல விருட்சம்: | உத்தால மரம் (ஆத்தியில் ஒரு வகை) |
தீர்த்தம்: | சுந்தர, பத்ம, காவிரி மற்றும் பல தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர் |
இறைவன் | வீங்கு நீர் துருத்தி உடையார் [1] |
இறைவி | அரும்பன்ன வனமுலை அம்மை |
தீர்த்தம் | காவிரி, வடகுளம் |
விருட்சம் |
தலவரலாறு
தொகுஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி.[2]
கோயில் அமைப்பு
தொகுராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். வலப்புறம் உத்தால மரம் உள்ளது. நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஆரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.
பெயர்க்காரணம்
தொகுதல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.
வழிபட்டோர்
தொகு- அம்பாள், சிவபெருமானை வழிபட்டுத் திருமணம் செய்த திருத்தலம்
- அக்கினி, வருணர், காளி, சூரியன், மன்மதன், காசிபர் உட்பட ஏழு முனிவர்கள் (காசிபர், ஆங்கிரசன், கவுதமர், மார்க்கண்டேயர், வசிட்டர், புலத்தியர், அகத்தியர்)
பரிகாரத் திருத்தலம்
தொகுதிருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்[2]
குடமுழுக்கு
தொகுஇக்கோவிலில் கடந்த 1960 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பின்பு 62 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மே மாதம் 8 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.[சான்று தேவை]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தேவாரம்.ஆர்க் தளம்
- ↑ 2.0 2.1 குமுதம் ஜோதிடம்; 04.07.2008; திருத்துருத்தி என்னும் திருமணத் திருத்தலம் கட்டுரை
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 136
வெளி இணைப்புகள்
தொகுபடத்தொகுப்பு
தொகு-
உள்மண்டபம்
-
உத்தால மரம்
-
மூலவர் கருவறை விமானம்
-
மற்றொரு வாயில்
-
மூலவர் கருவறை விமானம்
-
அம்மன் சன்னதி
-
மூலவர் சன்னதி கோஷ்டம்