சுதா ரகுநாதன்
இந்திய கர்நாடக இசைப்பாடகர்
சுதா ரகுநாதன் (Sudha Ragunathan) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி உள்ளார். மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் தண்ணீர் என்கிற நாவல் 2015-ம் ஆண்டு வசந்தசாய் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளராகவிருக்கிறார்.[1]
சுதா ரகுநாதன் | |
---|---|
2012 இல் பேர்த் நகரில் சுதா ரகுநாதன் | |
பிறப்பு | சுதா வெங்கட்ராமன் ஏப்ரல் 30 |
பணி | கருநாடக இசைப் பாடகி |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | ரகுநாதன் (1982) |
பிள்ளைகள் |
|
திரைப்படப் பாடல்கள்
தொகுபாடல் | திரைப்படம் | பாடகர்கள் | இசை |
---|---|---|---|
அனல் மேலே பனித்துளி | வாரணம் ஆயிரம் | சுதா ரகுநாதன் | ஹாரிஸ் ஜயராஜ் |
அபிநயம் காட்டுகின்ற | உளியின் ஓசை | பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் | இளையராஜா |
ஆகாயம் | ஜக்பாட் | சுதா ரகுநாதன் | இளையராஜா |
ஆடும் பாதம் | பொன் மேகலை | சுதா ரகுநாதன் | இளையராஜா |
எனக்கென | இவன் | சுதா ரகுநாதன் | இளையராஜா |
என்ன குறையோ | மந்திர புன்னகை | சுதா ரகுநாதன் | வித்யாசாகர் |
ஏனோ ஏனோ பனித்துளி | ஆதவன் | ஆண்ட்ரியா, சாஹில் ஹட, சுதா ரகுநாதன் | ஹாரிஸ் ஜயராஜ் |
கண்ணன்நீபாகருட்டு | இவன் | சுதா ரகுநாதன் | இளையராஜா |
கன்னடச (Mix) | தவம் | மகாலக்ஷ்மி ஐயர், சுதா ரகுநாதன் | D.இமான் |
காதல் பெரியத | சத்தம் போடாதே | சுதா ரகுநாதன் | யுவன் ஷங்கர் ராஜா |
தீம் | தவமாய் தவமிருந்து | மது பாலகிருஷ்ணன், சரத், சுதா ரகுநாதன் | சபேஷ் |
வீணா வாணி | பொன் மேகலை | சுதா ரகுநாதன் | இளையராஜா |
விருதுகள்
தொகு- பத்மபூசண் விருது, 2015 [2]
- பத்மசிறீ விருது
- சங்கீத சூடாமணி விருது, 1997
- இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2010
- இசைப்பேரறிஞர் விருது, 2011. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
- சங்கீத கலாநிதி விருது, 2013[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ சுதா ரகுநாதன் திரைப்பட இசை அமைப்பாளர் ஆகிறார்
- ↑ "என்.கோபாலசாமி, சுதா ரகுநாதனுக்கு பத்மபூஷண் அத்வானி, அமிதாப்பச்சன், தமிழக விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசனுக்கு 'பத்ம விபூஷண்' விருது மத்திய அரசு அறிவிப்பு". தினத்தந்தி. 26 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 26 சனவரி 2015.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://www.tamilisaisangam.in/awards.php. பார்த்த நாள்: 3 June 2024.
- ↑ "'Sangita Kalanidhi' for Sudha Ragunathan". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
- ↑ ‘Success is a journey, not a destination’