ஆர். கே. ஸ்ரீகண்டன்

ஆர். கே. ஸ்ரீகண்டன் (R. K. Srikantan) (ஜனவரி 14 1920 - பெப்ரவரி 17 2014 )[1][2] தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

ஆர். கே. ஸ்ரீகண்டன்
ஆர். கே. ஸ்ரீகண்டன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசனவரி 14, 1920(1920-01-14)
இறப்புபெப்ரவரி 17, 2014(2014-02-17) (அகவை 94)
இசை வடிவங்கள்கருநாடக இசை

ஆரம்பகால வாழ்க்கைதொகு

கர்நாடக மாநிலத்தின் ருத்ரபட்டணம் எனும் ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆர். கிருஷ்ணசாஸ்த்ரி ஹரிகதை வித்துவான் ஆவார். ஸ்ரீகண்டனின் தாத்தா நாராயணசுவாமி என்பவர் ஒரு வீணையிசைக் கலைஞராவார். ஆரம்பத்தில் தந்தையாரிடம் இசையினைக் கற்ற ஸ்ரீகண்டன் பின்னர் தனது சகோதர் ஆர். கே. வேங்கடராம சாஸ்த்ரியிடம் மேற்கொண்டு இசையினைக் கற்றுக்கொண்டார். மைசூரிலுள்ள பனுமையா உயர்பள்ளியில் பள்ளிக்கல்வியினை முடித்தபிறகு, மைசூரின் மகாராஜா கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கைதொகு

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், மைசூர் வாசுதேவாசார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற அக்காலத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களிடம் பாடம் கேட்டு தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டார் ஸ்ரீகண்டன்.

மறைவுதொகு

ஸ்ரீகண்டன் பெப்ரவரி 17, 2014 அன்று பெங்களூரில் காலமானார்[3].

சிறப்புகள்தொகு

இவரின் பாட்டுமுறை, நாகசுவர பாணியில் அமைந்திருந்ததாக இசை விமரிசகர்கள் கருதுகிறார்கள். அதிக அளவு நாகசுவர இசையினை இவர் கேட்டு வளர்ந்ததே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.

இவரின் 60 ஆண்டுகளுக்கும் மேலான இசைப்பணியில், இரண்டு மணி நேரக் கச்சேரியைத் தனது 92-வது வயதிலும் ஸ்ரீகண்டனால் தர முடிந்தது.[4][5]

பெற்ற விருதுகளும் பட்டங்களும்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

உசாத்துணைதொகு

'நாத முனி' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 32), தினமணி இசைவிழா மலர் (2011-2012)

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._ஸ்ரீகண்டன்&oldid=2888770" இருந்து மீள்விக்கப்பட்டது