எம். பி. என். பொன்னுசாமி
எம். பி. என். பொன்னுசாமி தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை தொகு
பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று பிறந்தவர். பெற்றோர்: நடேசன் பிள்ளை - சம்பூர்ணம். தனது தந்தையாரிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது ஏழாவது வயதில் தந்தை, மூத்தத் தமையனார் எம். பி. என். சேதுராமன் இவர்களுடன் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் கோயில் சந்நிதியில் நாதசுவரம் வாசிக்கத் தொடங்கினார். ஒன்பதாவது வயதில் தனது தமையனார் எம். பி. என். சேதுராமனுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.
விருதுகள் தொகு
- கலைமாமணி விருது, வழங்கியது: தமிழக அரசு
- நாதசுர கலாநிதி, வழங்கியது: தருமபுரம் ஆதீனம்
- சங்கீத சூடாமணி விருது, 1999. வழங்கியது: சென்னை சிறீ கிருஷ்ண கான சபா
- இசைப்பேரறிஞர் விருது, 2012. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.
உசாத்துணை தொகு
'நலந்தானா.. நலந்தானா!' எனும் தலைப்பிலமைந்த கட்டுரை (பக்கம் எண்: 40), தினமணி இசைவிழா மலர் (2012-2013)
வெளியிணைப்புகள் தொகு
- Divine notes and movie magic பரணிடப்பட்டது 2012-07-03 at the வந்தவழி இயந்திரம்