டி. என். சேசகோபாலன்

மதுரை டி. என். சேஷகோபாலன் (பிறப்பு:செப்டம்பர் 5, 1948) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]

மதுரை டி. என். சேஷகோபாலன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசெப்டம்பர் 5, 1948 (1948-09-05) (அகவை 75)
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கர்நாடக இசை - இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடகர்

இசைப் பயிற்சி

தொகு

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் தனது தாயாரிடம் இசை பயின்றார். அதன்பிறகு ராமநாதபுரம் சி. எஸ். சங்கரசிவனிடம் இசை கற்றுத் தேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றுள்ள இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இசைப்பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இசைத்துறைப் பங்களிப்புகள்

தொகு

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் குருப் பரம்பரையின்படி ஹரிகதை சொல்லுவதில் இவர் வல்லவர். இவர் தில்லானா, பஜன், நாமாவளி மற்றும் அபங் பாடல்களை தானும் எழுதிப் பாடி வருகிறார். வட இந்திய ராகங்களைப் பாடுவதிலும் ஆர்வம் காட்டும் இவர், பல்வேறு ஜுகல்பந்திகளிலும் பங்கேற்கிறார்.

இசைப் பயணங்கள்

தொகு

1984 ல் ஆஸ்திரேலியாவின் அடிலைய்டு நகரில் நடந்த சர்வதேசத் திருவிழாவில் கலந்துகொண்டு பாடுமாறு இவர் அழைக்கப்பட்டார். பெர்த், சிட்னி மற்றும் நியூசிலாந்திலும் நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 1987 ல் ருஷ்யாவுக்கான இந்தியாவின் கலாச்சாரத் தூதராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், இலங்கை மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்

தொகு
  • கம்பன் புகழ் விருது, 2008 வழங்கியது: கொழும்புக் கம்பன் கழகம், இலங்கை
  • காயக சிகாமணி, ஜனவரி 2007; வழங்கியது: சௌடையா நினைவு அறக்கட்டளை, மைசூர்.
  • சங்கீத கலாநிதி விருது, 2006; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை.[2]
  • பத்மபூஷன், 2004.
  • சங்கீதசாகரா, 2007; வழங்கியது : CMANA, NJ, USA.
  • சுலக்ஷண கான விக்க்ஷனா, 1993; வழங்கியவர்: ஹச். ஹச். ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் , ஸ்ரீரங்கம்.
  • குமரகந்தர்வா ராஷ்ட்ரிய சன்மான், 2002; வழங்கியது: குமரகந்தர்வா நிறுவனம், மும்பை.
  • நாதபிரம்மம், 2002; வழங்கியது: இந்தியன் பைன் ஆர்ட்ஸ், Texas, USA.
  • இசைப்பேரறிஞர் விருது, 2000. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
  • சங்கீத நாடக அகாதெமி விருது, 1999 – 2000.[4]
  • திருப்புகழ் மணி, 1964
  • கான பூபதி, 1967; வழங்கியது: ஒலவகோட் தமிழ்ச் சங்கம்.
  • சங்கீத கலாசாகரம்; வழங்கியவர்: ஜெயந்திர சரஸ்வதி, காஞ்சி காமகோடி பீடம்
  • கலைமாமணி விருது, 1984; வழங்கியது: தமிழ்நாடு அரசு
  • இசைச் செல்வம், வழங்கியவர்: மு. கருணாநிதி
  • இசை கலை வேந்தன், 1998; வழங்கியது: Australian Foundation of Canberra
  • சங்கீத கலாசிகாமணி விருது; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
  • கான கலா பாரதி, 2013; வழங்கியது: பாரத் கலாச்சார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  2. http://sify.com/carnaticmusic/fullstory.php?id=14361250
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024. 
  4. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  5. http://www.thehindu.com/news/cities/chennai/bharat-kalachar-honours-eminent-personalities/article5414127.ece

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._சேசகோபாலன்&oldid=4008475" இலிருந்து மீள்விக்கப்பட்டது