ரம்யா சுப்பிரமணியன்

இந்திய நடிகை

வி. ஜே. ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் (Ramya Subramanian) என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.

ரம்யா சுப்பிரமணியன்
ஆடை திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ரம்யா
பிறப்புஇந்திய ஒன்றியம், தமிழ்நாடு, தஞ்சாவூர்
பணிநடிகை, தொகைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
Aparajith Jayaraman
(தி. 2014; ம.மு. 2015)

தொழில் தொகு

 
ஒரு விழாவில் ரம்யா.

2004 இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார் [1] விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.[2] திருமணத்திற்குப் பிறகு, இவர் தொலைக்காட்சி பணிகளைக் குறைத்துக் பிற வேலையில் கவனம் செலுத்த அதிக விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.[3]

2007 ஆம் ஆண்டில், ரம்யா மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.[4] 2015 இல் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக தோன்றினார்.[5][6] அதே ஆண்டில், இவர் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளர் ஆனார்.[7] இவர் 2019 ஆகத்து மாதத்திற்கான வி இதழின் உடற்பயிற்சி சிறப்பு இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ரம்யா சென்னையில் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவனில் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆதர்ஷ் வித்யாலயாவில் தனது 11 வது மற்றும் 12 வது படிப்பை தொடர்ந்தார்.[சான்று தேவை] பின்னர் இவர் சென்னை எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் காட்சித் தொடர்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[9]

இவர் 2014 இல் அபர்ஜித் ஜெயராமனை மணந்தார், இந்த இணையர் 2015 இல் பிரிந்தனர்.[10]

திரைப்படவியல் தொகு

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2007 மொழி பண்ணையாரின் மகள்
2011 மங்காத்தா செய்தியாளர்
2015 ஓ காதல் கண்மணி அனன்யா
மாசு என்கிற மாசிலாமணி செய்தியாளர்
2017 வனமகன் ரம்யா
2019 கேம் ஓவர் வர்ஷா இருமொழி திரைப்படம் (தமிழ் மற்றும் தெலுங்கு)
ஆடை ஜெனிபர்
2021 மாஸ்டர் ரம்யா
சங்கத்தலைவன் லட்சுமி

குறிப்புகள் தொகு

 

  1. "VJ Ramya Subramanian is a fitness pro; her workout videos will inspire you". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 May 2019. Archived from the original on 23 October 2020. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  2. Raghavan, Nikhil (3 March 2014). "ShotCuts: What a brainwave!". தி இந்து. Archived from the original on 16 June 2021. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  3. CR, Sharanya (22 March 2014). "I am choosy about my work now: Ramya". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 6 October 2015. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  4. "VJ Ramya takes a 'kutty break' from social media to 'unplug'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 May 2020. Archived from the original on 28 May 2020. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  5. "Ramya Subramanian moves to big screen". Sify. 30 November 2014. Archived from the original on 13 October 2015. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  6. "VJ Ramya reveals she accepted OK Kanmani because of Mani Ratnam". IndiaGlitz. 20 April 2015. Archived from the original on 20 July 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  7. "Ramya is an RJ now". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 September 2015. Archived from the original on 5 September 2015. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  8. "Ramya Subramanian Exclusive Photoshoot". WE Magazine. 7 August 2019. Archived from the original on 8 August 2019. பார்க்கப்பட்ட நாள் 8 August 2019.
  9. Das, Papri (5 December 2013). "VJ Ramya is anchoring for the fun of it". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 29 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  10. "VJ Ramya confirms ending marriage". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 September 2015. Archived from the original on 11 August 2020. பார்க்கப்பட்ட நாள் 25 June 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_சுப்பிரமணியன்&oldid=3742660" இலிருந்து மீள்விக்கப்பட்டது