சங்கத்தலைவன்
சங்கத்தலைவன் (Sangathalaivan) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். மணிமாறன் இயக்கிய இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்த, இப்படம் 26 பெப்ரவரி 2021 இல் வெளியானது.[1]
சங்கத்தலைவன் | |
---|---|
இயக்கம் | மணிமாறன் |
தயாரிப்பு | உதயகுமார் கீதா உதயகுமார் வெற்றிமாறன் |
கதை | மணிமாறன் |
இசை | ராபர்ட் சர்குணம் |
நடிப்பு | சமுத்திரக்கனி கருணாஸ் ரம்யா சுப்பிரமணியன் |
ஒளிப்பதிவு | சீனிவாஸ் தேவாம்சம் |
படத்தொகுப்பு | ஜி. பி. வெங்கடேஷ் |
கலையகம் | உதய் புரொடக்சன்ஸ் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி |
வெளியீடு | பெப்ரவரி 26, 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுநூற்பாலை தொழிலாளியான ரங்கனின் கருணாஸ் ) வாழ்க்கையை இந்த கதை பின்தொடர்கிறது. நூற்பாலையில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறான் ரங்கன். ஆலையில் உடன் வேலை பார்க்கும் பெண் இயந்திரத்தில் சிக்கி அதனால் கையை இழக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு ஆலை முதலாளி கோவிந்தராஜ் (ஜி. மரிமுத்து ) உரிய இழப்பீடு அளிக்காமல் ஏமாற்றுகிறார். இந்த விசயத்தை விசைத்தறி தொழிலாளர் சங்கத் தலைவர் சிவலிங்கத்திடம் ( சமுத்திரக்கனி ) கொண்டு செல்கிறான். அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடை பெற்றுத் தருகிறார். அதன்பிறகு ரங்கன் மெல்லமெல்ல சங்கத்தின் செயல்பாடுகளில் ஈடுபடுகிறான். பின்னர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக போராடுகிறான். இந்நிலையில் சிவலிங்கம் சிறைக்குச் செல்கிறார். இதனால் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு ரங்கனிடம் வருகிறது. ரங்கன் அவற்றை எவ்வாறு கையாண்டான் போராட்டத்தில் வெற்றிபெற்றானா என்து கதையின் பிற்பகுதியாகும்.
நடிகர்கள்
தொகு- சமுத்திரக்கனி சிவலிங்கமாக
- கருணாஸ் ரங்கநாதனாக
- ரம்யா சுப்பிரமணியன் இலட்சுமியாக
- சுனு லட்சுமி
- சம்பத் ராம்
- சீனு மோகன்
- ஜி. மாரிமுத்து
தயாரிப்பு
தொகுஇந்த படம் 2017 அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. மணிமாறன் இயக்க, வெற்றிமாறன் தயாரிக்க, சமுத்திரக்கனி நடிக்கும் படமாக அறிவிக்கபட்டது. இதன் கதை தறியுடன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. கதையின் பின்புலமானது சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. மேலும் இது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்து கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.[2][3] ரம்யா சுப்பிரமணியன் வேல்ராஜின் பரிந்துரைக்குப் பிறகு படத்தில் நடித்தார். படமானது தமிழக கிராமப்புறங்களில் படமாக்கப்பட்டாது.[4][5][6]
இசை
தொகுஇப்படத்திற்கு ராபர்ட் சற்குணம் இசையமைத்தார்.[7]
- சர்வேசா - ஜெயமூர்த்தி
- புது வித - சைந்தவி
- போராட்டம் இல்லாமல் - டீஜே, அருண்ராஜா காமராஜ்
மேற்கோள்கள்
தொகு
- ↑ Subramanian, Anupama (22 February 2020). "'No questions asked it's Vetrimaaran calling'". Deccan Chronicle.
- ↑ K, Janani (21 October 2017). "Manimaran to direct Samuthirakani". Deccan Chronicle.
- ↑ "Manimaran's next film titled Sanga Thalaivan starring Samuthirakani". Behindwoods. 8 November 2017.
- ↑ "Location Diaries: From VJ to village belle". The New Indian Express.
- ↑ "VJ Ramya to make her debut as a female lead in 'Sanga Thalaivan' - Times of India". The Times of India.
- ↑ "VJ Ramya wraps up Sangathalaivan with new pic from sets". India Today. November 20, 2018.
- ↑ https://gaana.com/album/sangathalaivan