கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி
தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி (Grass Root Film Company) என்பது இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது இயக்குநர் வெற்றிமாறனால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் மீகா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து உதயம் என். எச். 4 படத்தின் வழியாக திரைப்பட தயாரிப்பில் நுழைந்தது. பின்னர் நிறுவனமானது உண்டர்பார் பிலிம்சுடன் இணைந்து 2013 இல் தயாரிக்கப்பட்ட பல திரைப்படத் திட்டங்களில் பணியாற்றியது. அதன் பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தது.
வகை | தனியார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2012 |
நிறுவனர்(கள்) | வெற்றிமாறன் ஆர்த்தி |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தொழில்துறை | மகிழ்கலை திரைப்படம் |
உற்பத்திகள் | திரைப்படம் |
உரிமையாளர்கள் | வெற்றிமாறன் |
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2013 | உதயம் என். எச். 4 | |
2014 | பொறியாளன் | |
2015 | காக்கா முட்டை | குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது |
2016 | விசாரணை | தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது |
2016 | கொடி | |
2018 | அண்ணனுக்கு ஜே | |
2018 | வட சென்னை | |
2019 | மிக மிக அவசரம் | |
2021 | சங்கத்தலைவன் |