மிக மிக அவசரம்

2019இல் தமிழ் மொழியில் வெளிவந்த படம்

மிக மிக அவசரம் (Miga Miga Avasaram) என்பது 2019இல் தமிழ் மொழியில் வெளிவந்த படமாகும். முன்பு கங்காரு என்றப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி என்பவர் இதை இயக்கியிருந்தார்.[2] இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா, ஹரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[3] இந்தப் படம் பெண் காவல் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மையையும், துன்புறுத்தலையும் அடிப்படையாகக் கொண்டது.[4] சிறீ பிரியங்கா 2020 ஆம் ஆண்டில் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார் .

மிக மிக அவசரம்
Poster
இயக்கம்சுரேஷ் காமாட்சி
தயாரிப்புசுரேஷ் காமாட்சிi
வெற்றிமாறன்
கதைகே. பி. ஜெகன்
இசைஇசான் தேவ்
நடிப்புஸ்ரீ பிரியங்கா
ஹரிஷ்
ஒளிப்பதிவுபாலபரணி
படத்தொகுப்புஆர். சுதர்சன்
கலையகம்வி ஹவுஸ் புரெடக்சன்ஸ்
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி
விநியோகம்கிளாப் போர்டு புரெகடக்சன்
வெளியீடுநவம்பர் 8, 2019 (2019-11-08)[1]
ஓட்டம்96 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • சாமந்தியாக ஸ்ரீ பிரியங்கா
  • சாமந்தியின் காதலனாக ஹரிஷ்
  • சாரதி
  • வழக்கு எண் முத்துராமன்
  • ராஜாக ஈ. இராமதாசு
  • சாமந்தியின் மாமனாக லிங்கா
  • திலீபனாக ஆண்டவன் கட்டளை அரவிந்த்
  • சங்கராக சரவண சக்தி
  • சுந்தராக வி. கே. சுந்தர்
  • எஸ். வெற்றி குமரன்
  • குணா
  • மாரிமுத்துவாக பெஞ்சமின்
  • குங்பூ ஆறுமுகம்
  • காதல் அருண் குமார்
  • சிறப்புத் தோற்றத்தில் சீமான்

பெண் காவலர் சாமந்தி ஒரு வெயில் நாளில் ஒரு பாலத்தில் காவல் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் அவரது சக ஆண் கண்காணிப்பாளர் இவரை கழிப்பறை பயன்படுத்த அனுமதியளிக்க மறுக்கிறார். நீண்டநேரப் போராட்டத்திற்குப்பின், கடைசியில் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துவிட்டு அழுகிறார்.

ஒலிப்பதிவு

தொகு

இசான் தேவ் படத்தின் ஒலிப்பதிவை மேற்கொண்டார். இயக்குநர் சேரன் ஒரு பாடலை எழுதினார்.[5]

வெளியீடு

தொகு

படம், வெளியானதும், முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி படத்தைப் பார்த்து, 200 பெண் காவல் அதிகாரிகளுக்காக திரைப்படத்தை திரையிட பரிந்துரைத்தார்.[2][6]

வரவேற்பு

தொகு

டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு 5 நட்சத்திரங்களில் 2 ஐக் கொடுத்தது, "சிறீ பிரியங்காவின் கண்ணியமான நடிப்பு மட்டுமே இத்தகைய சூழ்நிலைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பகரமான அனுபவத்தை வெளிப்படுத்த முடிந்தது" எனக் கூறியது.[7] டெக்கான் க்ரோனிகல் ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரை மதிப்பெண்ணை கொடுத்து, "எழுத்து சிறப்பாக இருந்திருக்க முடியும், மேலும் படத்தின் நீளமும் அதிகமான்து. ஆயினும்கூட, இப்படம் ஒரு செய்தியைக் கொண்ட ஒரு நல்ல நோக்கம் கொண்ட படமாகும். இந்த சிறிய குறைபாடுகளை கவனிக்க முடியாது" என்றது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  2. 2.0 2.1 "'Miga Miga Avasaram' to depict female police officers' ordeals". The New Indian Express.
  3. Anupama Subramian (1 February 2019). "Give more chances to Tamil girls, says Sri Priyanka". Deccan Chronicle.
  4. Nikhil Raghavan (1 October 2019). "A new police story". The Hindu.
  5. Subramanian, Anupama (7 September 2017). "Cheran turns lyricist!". Deccan Chronicle.
  6. "Miga miga avasaram Chennai box office report". Archived from the original on 2020-02-12.
  7. "Miga Miga Avasaram Movie Review : A bizzare story which is not executed well". Times of India. 11 October 2019.
  8. Subramanian, Anupama (11 November 2019). "Miga miga Avasaram review: Well-intentioned film with message". Deccan Chronicle.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக_மிக_அவசரம்&oldid=4171887" இலிருந்து மீள்விக்கப்பட்டது