ஆர். சுதர்சன்
ஆர். சுதர்சன் (R. Sudharsan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ரா. பார்த்திபன் சம்பந்தப்பட்ட படங்களில் பெரும்பாலும் பணியாற்றியுள்ளார். இவர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (2013) படத்தின் வழியாக அறிமுகமானார். [1]
ஆர். சுதர்சன் | |
---|---|
பிறப்பு | ஆர். சுதர்சன் 29 மே 1989 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
மற்ற பெயர்கள் | Vijay Harsan |
பணி | திரைப்பட தொகுப்பாளர் |
தொழில்
தொகுசுதர்சன் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் திரைப்பட தொகுப்பு படிப்பை படித்தார்.
சுதர்சன் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (2013) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இயக்குனரின் மரணத்திற்குப் பிறகு, ரா. பார்த்திபன் சுதர்சனின் தொழில் வாழ்க்கைக்கு உதவுவதாக தெரிவித்தார். மேலும் அவரது அடுத்த படங்களான கதை திரைக்கதை வசனம் இயக்கம் ( 2014) மற்றும் கோடிட்ட இடங்களை நிரப்புக (2017) போன்ற படங்களில் வாய்ப்பளித்தார். [2] சுதர்சன் ஜீரோ (2016) படத்திலும் பணிபுரிந்தார். அப்படத்தில் இவரது பணியை Behindwoods.com பாராட்டியதுடயது. [3]
திரைப்படவியல்
தொகுபடத்தொகுப்பாளராக
தொகு- நாகராஜ சோழன் எம்.ஏ, எம்எல்ஏ (2013)
- கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014)
- ஜீரோ (2016)
- கோடிட்ட இடங்களை நிரப்புக (2017)
- தாயம் (2017)
- ஏமாலி (2018)
- ஒத்த செருப்பு அளவு 7 (2019)
- மிக மிக அவசரம் (2019)
- இருட்டு (2019)
- தட்றோம் தூக்றோம் (2019)
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-16. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
- ↑ http://www.fulloncinema.com/index/wp-content/uploads/2014/05/photo-3.jpg
- ↑ http://www.behindwoods.com/tamil-movies/zero/zero-review.html