ஜீரோ (2016 திரைப்படம்)

ஜீரோ (Zero (2016 film)) ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் கனவுருச்சாயல் புனைவு கொண்ட திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சிவ் மோஹா என்வர் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அஸ்வின் ககுமனு மற்றும் சிவதா முன்னணிக் கதாபாத்திரங்களிலும், ஜேடி சக்கரவர்த்தி கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரமாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது இந்தி மொழியில் இதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜீரோ
இயக்கம்சிவ் மோஹா
தயாரிப்புபாலாஜி காபா
கதைசிவ் மோஹா
இசைநிவாஸ் கே. பிரசன்னா
நடிப்பு
ஒளிப்பதிவுபாபு குமார்
படத்தொகுப்புஆர். சுதர்சன்
கலையகம்http://madhavmedia.in
விநியோகம்மாதவ் மீடியா
புளுஓசன் என்டெர்டெய்ன்மெண்ட்
வெளியீடு25 மார்ச் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்களம்

தொகு

இத்திரைப்படம் ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோரைப் படைத்த விதத்தில் இருந்து தொடங்குகிறது. பின்னர், திரைக்கதையானது, புதியதாகத் திருமணமான தம்பதியினர் பாலா (அஸ்வின் ககுமனு) மற்றும் பிரியா (சிவதா) தங்களது புதிய அடுக்ககத் தளத்திற்குக் குடிபுகும் நிகழ்விற்கு நகர்கிறது. பாலாவின் தந்தை பிரியாவின் குடும்பத்தில் உள்ள உளப் பிறழ்வு நோய் பின்னணியினால் இத்திருமணத்திற்கு இசைய மறுக்கிறார். பிரியா கருவில் இருந்த போது அவளது தாயார் மனநலக் குறைவிற்கு ஆளாகி பிரியாவை ஈன்று விட்டு இறந்து போனார். பாலா பிரியாவின் தாய்க்கு நேர்ந்தது தெரிந்திருந்தும் அதை ஏற்றுக் கொள்கிறார். தங்களது புதிய இல்லத்திற்குச் சென்ற பிறகு, இளம் தம்பதியினர் ஒரு கடைக்குச் சென்று உதட்டுச்சாயம் ஒன்றை எடுத்து விட்டு அதற்குப் பணம் செலுத்தாமல் விட்டு விடுகிறாள். அவள் தான் உதட்டுச்சாயம் எடுத்ததை மறந்து விட்டதாகக் கூறி பாதுகாவலரிடம் சண்டையிடுகிறார். வீட்டிற்கு வந்த பிறகு, வீட்டிற்கு வந்திருந்த பாலாவின் தந்தையுடன் பேச மறுக்கிறாள். தனது அடுத்த வீட்டுக்காரருடன் பேசும் போது அவள் ஏன் கருத்தரிக்கக்கூடாது என்பதைத் தனது தாய்க்கு நிகழ்ந்ததைக் காரணம் காட்டி விவரிக்கிறாள். அன்றைய இரவில், பிரியா தனது தாயுடன் கனவில் தன்னைக் கடையில் எவ்வாறு திருடி என்று பட்டம் சுமத்தினார்கள்? என்று விவாதிக்கிறாள். மேலும், தனக்கு இளஞ்சிவப்பு நிறத்தின் மீது எவ்வளவு ஆசை என்பைதயும், அதை எவ்வளவு நேசிக்கிறாள்? என்பதையும் சொல்லி தான் திருடியதாக ஒப்புக்கொள்கிறாள். அதன் பிறகு, அவள் தனது தாயாருடன் கனவு வாழ்க்கையில் நுழைந்து துாக்கத்தில் நடக்கும் நிலைக்கு மாறுகிறாள். இந்த நிலையில் தான், எதிர்காலத்தில் நடக்கவிருப்பது நிகழ்கிறது. அவள் அதிக மாயத்தோற்றங்களைக் காணத் தொடங்குகிறாள். கிட்டத்தட்ட உளப்பிறழ்ச்சியடைந்தவளாகவே மாறி விடுகிறாள். ஒரு நாள் பாலாவை அறைந்து விடுகிறாள். பிரியாவின் உடலை எடுத்துக் கொண்டு லிலித் (ஆட்ரியானே) சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். பாலா ஆவிகளுடன் பேசக்கூடிய மீ்இயல் திறன் கொண்ட மந்திரத் திறன் கொண்ட சாலமோனைத் (ஜேடி சக்ரவர்த்தி) தேடிச்செல்கிறார், அவரிடம் தனது வினோதமான நிலைமையை விளக்குகிறார். சாலமோன் பிரியாவைத் தொட்ட போது ஆதாமிற்காக உருவாக்கப்பட்ட லிலித் ஆதாமிற்கு எதிராக நடந்து கொண்டதால் ஆதாமுக்கு சரியான இணையாக ஏவாளைக் கடவுள் உருவாக்கியதாகவும் லிலித் சாத்தானுடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதெல்லாம் அந்த கரு சிதைந்து போகும்படி கடவுள் சாபமிட்டிருந்தார். இதனால், வெறுப்படைந்த லிலித் தீவிரமான வெறுப்படைந்த ஆன்மாவாக மாறி உலகில் கருத்தரிக்கும் குழந்தையின் தாய் உடலுக்குள் புகுந்து அவர்களைக் கொன்று, தன்னுடன் தீய ஆன்மாக்களாக அவர்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறார். பிரியாவின் தாயார் மட்டுமே குழந்தையை உயிருடன் பெற இயன்றது. சாத்தானின் யோசனைப்படி லிலித் இளஞ்சிவப்பு நிற பாம்பாக மாறி இந்த உலகத்தை அழிக்கும் தருணத்தை எதிர்பார்க்கிறார். பாலாவின் புனிதமான தன்மையின் காரணமாக, பிரியாவை பாலா தொட நேரும் போது பிரியா தனது பழைய நினைவுகளையெல்லாம் பெறுகிறாள். சாலமோனும், உலகில் உள்ள அனைத்து குருமார்களும் இணைந்து சாத்தானின்்முயற்சியைத் தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். கடவுள் நேரத்தை உறைய வைத்து சாத்தானின் முயற்சி வீணில் போகச் செய்கிறார். கடவுள் பிரியாவையும், அவளது குழந்தையையும் ஆசீர்வதிக்கிறார். சாத்தான் மீண்டும் தனது அரக்க உருவத்தை எடுத்து மீண்டும் உலகை அழித்தே தீருவேன் என்று சவால் விட திரைப்படம் முடிகிறது.

நடிப்பு

தொகு

தயாரிப்பு

தொகு

இயக்குநர் பரத் பாலாவின் இணை இயக்குநராக இருந்த ஷிவ் மோஹா ஒரு பேய் மற்றும் திகில் படத்தை தயாரிப்பதற்கு முன் வேலையில் ஈடுபட்டார். படத்தயாரிப்புக்கான முன் முயற்சியின் போது தயாரிப்பாளர்களை அணுகினார். அஸ்வின் மற்றும் சிவதா ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக ஒப்பந்தம் செய்தார்.[1] இந்தக் குழு சூன் 2014 இல் தயாரிப்பைத் தொடங்கினர். சென்னையில், அஸ்வின், சிவதா, ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் நடித்த காட்சிகளைச் சென்னையில் படமாக்கினர்.[2] மேலும், சில காட்சிகள் வட இந்தியாவில் படம் பிடிக்கப்பட்டன.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "A ghost from biblical times for Mankatha Ashwin".
  2. "Shivada signs `zero`, a supernatural thriller". Sify. Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2018-04-07.
  3. "Horror Story with a Difference". The New Indian Express.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீரோ_(2016_திரைப்படம்)&oldid=4050587" இலிருந்து மீள்விக்கப்பட்டது