திரைப்படத் தயாரிப்பு

திரைப்படத் தயாரிப்பு என்பது, திரைப்படம் ஒன்றை உருவாக்கும் செய்கையைக் குறிக்கும். இது, தொடக்க எண்ணக்கரு, கதைக்கரு என்பவற்றில் இருந்து, திரைக்கதை எழுதுதல், படக்குழுத் தேர்வு, படத்தொகுப்பு என்பவற்றினூடாக முன்னோட்டமாகத் திரையிடல் வரையான பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. திரைப்படத் தயாரிப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில், பலவகையான பொருளியல், சமூக, அரசியல் சூழல்களில் இடம்பெறுகின்றன. இதற்குப் பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் பெருமளவினர் ஈடுபடுவதுடன், இதற்கு மாதக் கணக்கில், சிலவேளைகளில் ஆண்டுக் கணக்கிலும் கூடக் காலம் தேவைப்படுகின்றது.

கட்டங்கள் தொகு

திரைப்படத் தயாரிப்பில் பல முக்கியமான கட்டங்கள் உள்ளன.[1]

  • தொடக்கம் - படத்துக்கான எண்ணக்கருவை உருவாக்குதல், ஏற்கனவே வேறொருவரால் எழுதப்பட்ட கதையாக இருந்தால் அதற்கான உரிமைகளை வாங்குதல், திரைக்கதை எழுதுதல், தேவையான நிதி வளங்களை ஒழுங்கு செய்தல் போன்றன இக்கட்டத்துள் அடங்குவன.
  • படப்பிடிப்புக்கு முந்திய கட்டம் - இக்கட்டத்தில், படப்பிடிப்புக்கான ஒழுங்குகள் செய்யப்படும். நடிகர்கள் தேர்வு, படக்குழுவினர் தேர்வு என்பவற்றோடு, படப்பிடிப்புக்கான இடத்தேர்வு, காட்சியமைப்புக்களை உருவாக்குதல் என்பனவும் இக்கட்டத்திலேயே இடம்பெறும்.
  • படப்பிடிப்புக் கட்டம் - இக்கட்டத்திலேயே திரைப்படத்தில் காட்சிகளைத் துண்டுதுண்டாகப் படம் பிடிப்பர்.
  • படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டம் - இந்தக் கட்டத்தில் துண்டு துண்டாக எடுக்கப்பட்ட படங்களில் வேண்டியவை தெரியப்பட்டு முறையாக தொகுக்கப்படுவதுடன், ஒலியும் சேர்க்கப்படுகின்றது.
  • திரைப்பட விநியோகம்|விநியோகம் - தயாரிக்கப்பட்ட படம் திரைப்படம் விநியோகிப்பவர்கள் ஊடாகத் திரையரங்குகளில் திரையிடப்படுவதுடன், குறுந்தட்டுகளாக வெளியிடுதல், தொலைக்காட்சிகளில் வெளியிடுதல் என்பனவும் இக்கட்டத்துக்கு உரிய செயற்பாடுகள்.

மேற்கோள்களை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்படத்_தயாரிப்பு&oldid=3924240" இலிருந்து மீள்விக்கப்பட்டது