கொடி (திரைப்படம்)

2016இல் வெளியான தமிழ் திரைப்படம்

கொடி (Kodi film) என்பது தமிழ் அரசியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். தனுஷ், அனுபமா பரமேஷ்வரன், சரண்யா பொன்வண்ணன, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். துரை செந்தில்குமாரின் முந்தைய இரு படங்களான எதிர்நீச்சல் (2013 திரைப்படம்) , காக்கி சட்டை (2015 திரைப்படம்) ஆகிய இரு படங்களைத் தயாரித்த தனுஷ் இவரின் இயக்கத்தில் இந்தப்படத்தில் இரு வேடமேற்று நடித்திருக்கிறார். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2] தர்மயோகி எனும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியான அடுத்த நாள் வெளியிடப்பட்டது.[3] இந்தப்படம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தனுஷ், திரிசாவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் போக்கிரி நாயகன் 2 (ரௌடி ஹீரோ 2) என்ற பெயரில் டெலிஃபிலிம்ஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியிட்டது.[4][5] இது கன்னடத்தில் துவாஜா (2018) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.[6]

கொடி
இயக்கம்ஆர்.எஸ். துரை செந்தில் குமார்
தயாரிப்புவெற்றி மாறன்
கதைஆர் .எஸ். துரை செந்தில்குமார்
திரைக்கதைஆர் .எஸ். துரை செந்தில்குமார்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்பு
ஒளிப்பதிவுவெங்கடேஷ் எஸ்
படத்தொகுப்புபிரகாஸ் மப்பு
கலையகம்கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
விநியோகம்எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 28, 2016 (2016-10-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்மதிப்பீடு. 75 கோடி[1]

கதைச் சுருக்கம் தொகு

கதையின் நாயகன் கொடி (தனுஷ்) பிறந்ததிலிருந்தே அரசியலை தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைத்து வாழ்ந்து வருபவர். அவனுடைய தந்தை முருகனும் (கருணாஸ்) தன்னுடைய மகன் அரசியல்வாதி ஆகவேண்டுமென்று நினைக்கிறார். மக்கள் வசிக்கும் பகுதியில் பாதரசக் கழிவுகளை கொட்டுவதை எதிர்த்து போராடிய போது முருகன் தீக்குளித்து இறந்து விடுகிறார். கொடியின் ஒத்த இரட்டையரான அன்பு (தனுஷ்) கொடிக்கு எதிரான மனோபாவங்களைக் கொண்டவன். கொடி சற்று கரடு முரடான குணங்களைக் கொண்டவர். ஆனால் அன்பு அமைதியை விரும்புபவர். ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துவருகிறார்.

கொடியின் பெண்தோழி ருத்ராவும் (திரிஷா) கொடியினைப் போன்றே சிறுவயது முதலே அரசியலில் இருந்து வருகிறார். தற்போது அவர் இருக்கும் கட்சிதான் ஆளுங்கட்சியாக இருக்கிறது. முட்டை விற்கும் பெண்மனியாக மாலதி (அனுபமா பரமேசுவரன) இருக்கிறார். ஒரு நாள் அவரின் முட்டைகளை கொடி உடைத்து விடுகிறார். அவரை துரத்தி செல்கையில் அன்புவை ,கொடி என நினைத்து அடித்து விடுகிறார். அன்புவிற்கு மாலதியின் மீது காதல் வருகிறது. மாலதி தன்னுடைய கிராமத்தில் பாதரசக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை அன்புவிடம் கூறுகிறார். அதனை அவர் தனது சகோதரர் கொடியிடம் கூறுகிறார்.

கொடி அதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு தனது கட்சித் தலைவரை (எஸ்.ஏ.சந்திரசேகர்) சந்திக்கிறார். பிறகு தான் தனது கட்சி உறுப்பினரான மாரிமுத்துவும் அவனது கூட்டாளிகளும் தான் இதற்கு காரணம் எனத் தெரிய வருகிறது. இதனை ருத்ராவிடம் தெரிவிக்க, அவரோ ஒரு பொது மேடைக் கூட்டத்தில் இதனை மக்களிடம் தெரிவிக்கிறார். அதனால் கொடியின் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பழகன் (நமோ நாராயனா) தன்னுடைய ஆட்களை அனுப்பி கொடி, ருத்ராவை சந்திக்கும் இடத்தில் (காட்டுப் பகுதில்) வைத்து கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார். இறுதியில் ருத்ராவே கொடியைக் குத்திக் கொலை செய்கிறார்.

கொற்றை வேல் (ராஜ சிம்மன்) கொடியை கொலை செய்ததற்கான நிகழ்படத்தை வைத்து ருத்ராவை மிரட்டுகிறார். ஆனால் கொற்றை வேலுவை காவல் அதிகாரியை வைத்து கொலை செய்துவிட்டு இறுதியில் காவல் அதிகாரியையும் ருத்ரா கொலை செய்கிறார். பின்னர் அன்பு தன்னை கண்டுபிடித்துவிடுவான் என நினைத்து பகத்சிங்கையும் அன்புவின் தாயையும் (சரண்யா பொன்வண்ணன்) ஆட்கடத்தல் செய்கிறார். பின்பு நான் தான் கொடியை கொலைசெய்தேன் என ருத்ராவே ஒப்புக்கொள்கிறார். பகத்சிங் தனது நண்பனுக்காக ருத்ராவை பழிதீர்க்கிறார்.

நடிப்பு தொகு

ஒலிவரி தொகு

கோடிக்கான ஒலிப்பதிவு ஆல்பம் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  நான்கு பாடல்களின் வரிகளை விவேக் எழுதியுள்ளார், தனுஷ் & அருண்ராஜா காமராஜ் எழுதி கொடி பறக்குதா பாடலை எழுதினார்.  இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வாங்கியது.  முழுமையான ஆல்பம் 5 அக்டோபர் 2016 அன்று சென்னை பிரசாத் லேப்ஸில் வெளியிடப்பட்டது.  இந்த ஆல்பம் ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது.

பாடல் வரிசை
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "கொடி பறக்குதா"  தனுஷ் அருண்ராஜா காமராஜ் 03:24
2. "ஏய் சுழலி"  விஜய் நரேன் 03:37
3. "ஆரிராரோ"  கே.எஸ்.சித்ரா 03:48
4. "சிறுக்கி வாசம்"  ஆனந்த் அரவிந்தக்சன் , சுவேதா மோகன் 04:35
5. "வேட்டு போடு"  சங்கர் மகாதேவன் 03:01
மொத்த நீளம்:
18:25

வெளியிணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கொடி (திரைப்படம்)

சான்றுகள் தொகு

  1. "கொடி 7 நாள் கலெக்சன்". International Business Times. 4 November 2016. http://www.ibtimes.co.in/kodi-7-day-box-office-collection-dhanushs-film-successfully-completes-its-first-week-theatres-702584. பார்த்த நாள்: 4 November 2016. 
  2. "திரைப்படத்தின் அசைவுப்படமும் அதற்காண பிண்ணனி இசையும் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது". http://www.reviewrating.org/kodi-movie-pics-hd-photos-stills-pictures-first-look-poster-kodi-dhanush/. 
  3. Hooli, Shekhar H. "தனுசின் கொடியின் தெலுங்கு பதிப்பு வெளியீடு தள்ளிப் போய்கிறது". http://www.ibtimes.co.in/dhanushs-kodi-telugu-version-dharma-yogi-release-postponed-kaashmora-rock-box-office-701550. பார்த்த நாள்: 15 December 2016. 
  4. உபாத்யாயா, பிரகாஷ். "கொடி விமர்சனம்". http://www.ibtimes.co.in/kodi-movie-review-live-audience-response-701475. பார்த்த நாள்: 15 December 2016. 
  5. "கார்த்தி படத்தை விட தனுசின் படம் வசூல் அதிகம்". 30 October 2016. http://indianexpress.com/article/entertainment/regional/kodi-vs-kaashmora-box-office-dhanush-film-dominates-tamil-nadu-karthi-film-rocks-worldwide-3729913/. பார்த்த நாள்: 15 December 2016. 
  6. http://www.thehindu.com/entertainment/interview-with-actor-priya-mani/article19407660.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடி_(திரைப்படம்)&oldid=3709322" இருந்து மீள்விக்கப்பட்டது