எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்

சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பு, விநியோக நிறுவனம்

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் (Escape Artists Motion Pictures) என்பது இந்திய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது தயாரிப்பாளர்கள் மதன், ஜேம்ஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. 2010 இல் உருவாக்கப்பட்ட இது பல தமிழ் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. [1] இவர்கள் 2010 முதல் பல தமிழ்ப் படங்களின் விநியோகஸ்தர்களாகவும் செயல்பட்டுள்ளனர். [2] [3] [4] [5]

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
வகைதிரைப்பட தயாரிப்பு, விநியோகம்
தலைமையகம்தமிழ்நாடு, சென்னை
முக்கிய நபர்கள்பி. மதன்
ஜேம்ஸ்
தொழில்துறைதிரைப்படம்

தொழில் தொகு

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் முதன்முதலில் 2009 இல் தி எகனாமிக் டைம்சின் ஒரு கட்டுரையில் அறிவிக்கப்பட்டது. அதில் விடிவி கணேஷ் மற்றும் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டின் எல்ரெட் குமார் மற்றும் ஆர். ஜெயராமன் ஆகியோருடன் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தயாரிப்பாளராக நிறுவனம் இணைவதாக அறிவிக்கப்பட்டது. [6] இந்த காதல் கதையில் சிலம்பரசன், திரிசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். படம் வெளியானதும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பல விமர்சகர்கள் படத்திற்கு "நவீன கிளாசிக்" அந்தஸ்தைக் கொடுத்தனர். அதே நேரத்தில் வணிக ரீதியாக வெற்றிகரமான படமாகவும் ஆனது. [7] [8]

திரைப்படவியல் தொகு

தயாரிப்பாளர் தொகு

ஆண்டு படம் இயக்குனர் நடிகர்கள் குறிப்புகள்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா கௌதம் மேனன் சிலம்பரசன், திரிசா
2011 அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன் அப்புக்குட்டி, சரண்யா மோகன்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பாண்டிராஜ் விமல், சிவகார்த்திகேயன், ரெஜினா கசாண்ட்ரா, பிந்து மாதவி
தேசிங்கு ராஜா எழில் விமல், பிந்து மாதவி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ்
2014 மான் கராத்தே திருக்குமரன் சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோட்வானி, வம்சி கிருஷ்ணா
கயல் பிரபு சாலமன் சந்திரன், ஆனந்தி
2016 மாப்ள சிங்கம் ராஜசேகர் விமல், அஞ்சலி
2016 கொடி ஆர். எஸ். துரை செந்தில்குமார் தனுஷ், திரிசா, அனுபமா பரமேசுவரன்
2019 எனை நோக்கி பாயும் தோட்டா கௌதம் மேனன் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார்

விநியோகஸ்தர் தொகு

ஆண்டு படம் இயக்குனர் நடிகர்கள் குறிப்புகள்
2014 வேலையில்லா பட்டதாரி வேல்ராஜ் தனுஷ், அமலா பால்
2015 காக்கி சட்டை ஆர். எஸ். துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா
பாயும் புலி சுசீந்திரன் விஷால், காஜல் அகர்வால்
கிருமி அனுச்சரன் கதிர், ரேஷ்மி மேனன்
தூங்காவனம் ராஜேஷ் எம். செல்வா கமல்ஹாசன், திரிசா
பசங்க 2 பாண்டிராஜ் கார்த்திக் குமார், பிந்து மாதவி
2016 பேய்கள் ஜாக்கிரதை கண்மணி ஜீவா ரத்னம், ஈஷய மகேஸ்வரி, தம்பி ராமையா
களம் ராபர்ட் ராஜ் சீனிவாசன், அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமெளலி
2017 முன்னோடி எஸ். பி. டி. ஏ. குமார் ஹரிஷ், யாமினி பாஸ்கர்

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு