தூங்காவனம்

தூங்காவனம் என்பது 2015இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ராஜேஸ் எம்.செல்வா இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்தார். இவருடன் திரிசா, பிரகாஷ் ராஜ், கிஷோர் ஆகியோரும் நடித்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும், தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் எனும் பெயரில் வெளியானது. இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்லீப்லஸ் னைட் எனும் திரைப்படத்தின் தழுவல் ஆகும். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சிறி கோகுலம் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்தன.

தூங்காவனம் / சீகட்டி ராஜ்ஜியம்
இயக்கம்ராஜேஸ் எம்.செல்வா
தயாரிப்புகமல்ஹாசன்
எஸ். சந்திரஹாசன்
கோகுலம் கோபாலன்
திரைக்கதைகமல் ஹாசன்
இசைஜிப்ரான்
நடிப்பு
ஒளிப்பதிவுசானு வருகீச்
படத்தொகுப்புசான் மொஹம்மட்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
சிறி கோகுலம் மூவிஸ்
விநியோகம்வைட் ஆங்கிள் கிரியேசன்ஸ்
வெளியீடு10 நவம்பர் 2015[1]
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழி

நடிகர்கள்தொகு

பாடல்தொகு

இப்படத்திற்காக ஒரே ஒரு பாடல் மட்டும் உருவாக்கப்பட்டது. "நீயே உனக்கு ராஜா" எனும் தொடங்கும் அப்பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார் மற்றும் கமல்ஹாசன் அப்பாடலை பாடியுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூங்காவனம்&oldid=3033822" இருந்து மீள்விக்கப்பட்டது