குரு சோமசுந்தரம்

இந்திய நடிகர்

குரு சோமசுந்தரம் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் ஹீத் லெட்ஜர் என்றழைக்கப்படுகிறார். தற்பொழுது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

வினோத் என்பவரால் எடுக்கப்பட்ட குரு சோமசுந்தரத்தின் புகைப்படம்
குரு சோமசுந்தரம்
பிறப்பு3 செப்டம்பர் 1975 (1975-09-03) (அகவை 49)
மதுரை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது

திரைப்படத்துறை

தொகு

குரு சோமசுந்தரம் 2002 - 2011 ஆண்டு காலத்தில் கூத்துப்பட்டறையில் இணைந்து நாடகங்களை உருவாக்கினார்.

2003 ஆம் ஆண்டு சந்திரஹரி நாடகத்தில் இவரைக் கண்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2008 ஆம் ஆண்டு இவரை அழைத்து தனது ஆரண்ய காண்டம் எனும் திரைப்படத்தில் 'காளையன்' எனும் வேடத்தில் நடிக்க வைத்தார்[1]. அவ்வேடம் பலத்த வரவேற்பை பெற்றது. பின், 2013 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

கூத்துப்பட்டறையிலிருந்து வெளியேறிய பின் 2013 ஆம் ஆண்டு 5 சுந்தரிகள் எனும் திரைப்படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்ததின் வாயிலாக மலையாளத் திரையுலகில் கால் பதித்தார்[1]. இதே ஆண்டில் இயக்குநர் சுசீந்தரனின் பாண்டிய நாடு திரைப்படத்தில் விசாலின் அண்ணனாக வேடமேற்று நடித்தார். 2014 ஆம் ஆண்டில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடிப்புக் கலை பயிற்றுனராக நடித்திருந்தார். நிகழ் வாழ்க்கையிலும் பாபி சிம்காவுக்கு இவர் நடிப்புக் கலையை பயிற்றுவித்தார்.[2].

குறும்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் மொழி தளம் குறிப்புகள்
2016 ஒரு பொய் தமிழ் வலையொளி
2017 இறுதி அறம் தமிழ் வலையொளி
2019 டெஸ்டினேஸியா தமிழ் வலையொளி
2020 குகை ஓவியங்கள் தமிழ் வலையொளி

திரைப்பட விவரம்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் வேடம் குறிப்புகள்
2011 ஆரண்ய காண்டம் காளையன்
2013 கடல் கோவில் குட்டி
2013 5 சுந்தரிகள் புகைப்படக் கலைஞர் மலையாளத் திரைப்படம்
2013 பாண்டிய நாடு நாகராஜ்
2014 ஜிகர்தண்டா முத்து
2015 49 - O ஆறுமுகம்
2015 பென்ச் டாக்கீஸ் - த பர்ஸ்ட் பென்ச் டேவிட்
2015 தூங்காவனம் விட்டல் ராவின் உதவியாளர்
2015 கோகினூர் நாயக்கர் மலையாளத் திரைப்படம்
2016 ஜோக்கர் மன்னர் மன்னன்
2016 குற்றமே தண்டனை பாலன்
2017


யாக்கை ஶ்ரீ ராம்
2018 ஓடு ராஜா ஓடு


மனோகர்
2018 வஞ்சகர் உலகம் சம்பத்

என்கிற துரைராஜ்

2019 பேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்
2021 மாறா சொக்கு
2021 மஞ்ச சட்ட பச்ச சட்ட அக்கா
2021 ஜெய் பீம் பீ.பீ.செல்லப்பாண்டியன்
2021 க் ஞானப்பிரகாசம்
2021 மின்னல் முரளி செல்வன்/ வெள்ளிடி வெங்கிடி (மலையாளத் திரைப்படம்)
2021 இது வேதாளம் சொல்லும் கதை வேதாளம் உருவாக்கத்திலுள்ளது
2021 மாமனிதன் உருவாக்கத்திலுள்ளது
2021 காதலிக்க யாருமில்லை உருவாக்கத்திலுள்ளது
2021 பரமகுரு உருவாக்கத்திலுள்ளது
2021 இந்தியன்-2 உருவாக்கத்திலுள்ளது

வலைத் தொடர்

தொகு
ஆண்டு வலைத் தொடர் தலைப்பு கதாப்பாத்திரம் மொழி
2020 டாப்லெஸ் கல்கி (அரசியல்வாதி) தமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-15. பார்க்கப்பட்ட நாள் 2016-10-13.
  2. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_சோமசுந்தரம்&oldid=4158220" இலிருந்து மீள்விக்கப்பட்டது