ஹீத் லெட்ஜர்
ஹீத் அன்ட்ரூ வில்லியம்ஸ் (Heath Andrew williams, ஏப்ரல் 4, 1979 – ஜனவரி 22, 2008) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாலிவூட் நடிகர் ஆவார். ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில், 10 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கிய ஹீத், 1990களில் தனது 16வது வயது முதல் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தார் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த ஹீத் லெட்ஜர், தனது 19வது வயதில் டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். புரோக்பேக் மவுண்டன் (Brokeback Mountain) என்ற படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
ஹீத் லெட்ஜர் Heath Ledger | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
2006 பெர்லின் திரைப்படவிழாவில் ஹீத் லெட்ஜர் | ||||||||||
இயற் பெயர் | ஹீத் அன்ட்ரூ லெட்ஜர் | |||||||||
பிறப்பு | பேர்த், மேற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா | ஏப்ரல் 4, 1979|||||||||
இறப்பு | சனவரி 22, 2008 நியூயோர்க் நகரம், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 28)|||||||||
நடிப்புக் காலம் | 1996 – 2008 | |||||||||
வீட்டுத் துணைவர்(கள்) | மிஷெல் வில்லியம்ஸ் (2005–2007) | |||||||||
பிள்ளைகள் | மட்டில்டா ரோஸ் | |||||||||
|
ஜனவரி 22, 2008 இல் நியூ யோர்க்கில் உள்ள தனது வீட்டில் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை தற்செயலாக அளவுக்கு அதிகமாகவும் தவறான நேரத்திலும் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் உயிரிழந்தார்[1][2][3]. கடைசியாக த டார்க் நைட் என்ற படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடித்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு மிச்செல் வில்லியம்ஸ் என்ற நடிகையை ஹீத் லெட்ஜர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மட்டில்டா என்ற பெண் குழந்தையும் உள்ளது. 2007 இல் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜேம்ஸ் பரன் (2008-01-23). "நடிகர் ஹீத் லெட்ஜர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்". நியூ யோர்க் டைம்ஸ். p. 1. http://www.nytimes.com/2008/01/23/movies/23ledger.html. பார்த்த நாள்: 2008-02-06.
- ↑ "ஹீத் லெட்ஜர்: டைம்ஸ் மரண அறிவித்தல்". டைம்ஸ் ஆன்லைன் (த டைம்ஸ்). 2008-01-23. http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article3237974.ece. பார்த்த நாள்: 2008-02-06.
- ↑ சூவெல் சான் (2008-02-06). "ஹீத் லெட்ஜரின் மரணம் தற்செயலானது". நியூ யோர்க் டைம்ஸ் (cityroom.blogs.nytimes.com). http://cityroom.blogs.nytimes.com/2008/02/06/heath-ledgers-death-is-ruled-an-accident/. பார்த்த நாள்: 2008-02-06.