த டார்க் நைட் (திரைப்படம்)
த டார்க் நைட் (The Dark Knight) 2008இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலனால் எழுதி தயாரித்து இயக்கப்பட்டது. பிரபல வரைபட நாயகன் பாட்மானின் திரைப்படத் தழுவலாகும். 2005இல் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ்சின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக த டார்க் நைட் ரைசஸ் திரைப்படம் 2012 சூலை மாதம் வெளிவந்தது.
The Dark Knight த டார்க் நைட் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிறிஸ்டோபர் நோலன் |
தயாரிப்பு | balaji சார்ல்ஸ் ரோவென் எம்மா தாமஸ் |
கதை | திரைக்கதை: கிறிஸ்டோபர் நோலன் ஜோனதன் நோலன் கதை: டேவிட் எஸ். கோயர் கிறிஸ்டோபர் நோலன் பாத்திரங்கள்: பாப் கேன் பில் ஃபிங்கர் ஜெரி ராபின்சன் |
இசை | ஹான்ஸ் சிம்மர் ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் |
நடிப்பு | கிரிஸ்டியன் பேல் மைக்கேல் கேன் ஹீத் லெட்ஜர் ஏரன் எக்ஹார்ட் கேரி ஓல்ட்மன் மாகி ஜிலன்ஹால் மார்கன் ஃபிரீமன் |
ஒளிப்பதிவு | வாலி ஃபிஸ்டர் |
படத்தொகுப்பு | லீ ஸ்மித் |
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் |
வெளியீடு | ஆஸ்திரேலியா: ஜூலை 16 2008 வட அமெரிக்கா: ஜூலை 18 2008 இங்கிலாந்து: ஜூலை 24 2008 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம் அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $180 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | அமெரிக்க உள்நாட்டு: $342,684,300[2] வெளிநாட்டு: $128,300,000[3] பல நாடுகளிலும்: $470,984,300 |
முன்னர் | பேட்மேன் பிகின்ஸ் |
சூலை 16 2008 இல் இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
தொகு- கிரிஸ்டியன் பேல்: பாட்மான்/புரூஸ் வெய்ன், கோடீஸ்வரர், கதையின் நாயகர். காத்தம் (Gotham) நகரின் குற்றவாளிகளுக்கு எதிராக சண்டை போடுகிறார். காத்தம் மக்களுக்கு பாட்மானும் புரூஸ் வெய்னும் ஒன்று என்று தெரியாது. இத்திரைப்படத்தின் முன்வந்த பேட்மேன் பிகின்ஸ் திரைப்படத்திலும் கிரிஸ்டியன் பேல் பாட்மான் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- ஹீத் லெட்ஜர்: ஜோக்கர், குற்றவாளி, திரைப்படத்தின் முக்கிய கெட்டவன். முகத்தில் கோமாளி வேடம் போட்டு காத்தம் நகரில் குற்றங்கள் செய்கிறார்.
- ஏரன் எக்ஹார்ட்: ஹார்வி டென்ட்/டூ-பேஸ், மாவட்ட வழக்கறிஞர் (District Attorney). காத்தமின் குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுகிறார்.
- மார்கன் ஃபிரீமன்: லூசியஸ் பாக்ஸ், புரூஸ் வெய்னின் "வெய்ன் எண்டர்பிரைஸஸ்" நிறுவனத்தின் தொழிலதிபர். பாட்மான் பயன்படுகிற பாட்மொபீல் (Batmobile) வண்டி, ஆயுதங்கள், கருவிகளை தயார்செய்கிறார்.
- மேகி ஜிலன்ஹால்: ரேச்சல் டாஸ், துணை மாவட்ட வழக்கறிஞர். இளமையில் புரூஸ் வெய்னின் தோழி. பேட்மேன் பிகின்ஸ் திரைப்படத்தில் கேட்டி ஹோம்ஸ் இந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- கேரி ஓல்ட்மன்: ஜேம்ஸ் கோர்டன், காவல்துறை ஆணையர். காத்தம் நகரில் ஊழல் செய்யாத காவல்துறையினர்களில் ஒன்றாவார்.
- மைக்கேல் கேன்: ஆல்ஃபிரெட், புரூஸ் வெய்னின் பரிசாரகர்.
வெளியீடும் வசூலும்
தொகுசூலை 18, 2008 இத்திரைப்படம் அமெரிக்காவில் வெளிவந்தது; சூலை 24 ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது. முதலாம் நாளில் $ 67.85 மில்லியன் வசூல் பெற்று ஸ்பைடர் மேன் திரைப்படமால் பெற்ற ஒரு நாளில் அதிக வசூல் சாதனையை தாண்டியுள்ளது. வரலாற்றில் மிக விரைவாக $300 மில்லியன் வசூல் பெற்ற திரைப்படம் இதுவே ஆகும்.
விமர்சனங்கள்
தொகுதிரைப்பட நிபுணர்களும் இத்திரைப்படத்தை பாராட்டுகின்றனர்; 246 விமர்சனங்களில் 94% இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளனர் என்று ராட்டன் டோமேட்டோஸ் இணையத்தளம் கூறியுள்ளது. இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின் பயனர்களால் வாக்கு செய்து வரலாற்றில் முதலாம் மிகச்சிறந்த திரைப்படம் என்று சில நாளாக இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ David M. Halbfinger (2008-03-09). "A Director Confronts Darkness and Death". The New York Times (nytimes.com). http://www.nytimes.com/2008/03/09/movies/09halb.html. பார்த்த நாள்: 2008-03-08.
- ↑ http://www.boxofficemojo.com/movies/?page=main&id=darkknight.htm, Box Office Mojo
- ↑ McNary, Dave (2008-07-27). "'Dark Knight' reigns overseas". Variety (magazine) (Reed Business Information). http://www.variety.com/article/VR1117989593.html. பார்த்த நாள்: 2008-07-31.