பேட்மேன் பிகின்ஸ் (திரைப்படம்)

(பேட்மேன் பிகின்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) 2005 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். எம்மா தாமஸ், லாரி பிராங்கோ, சார்லஸ் ரோவன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேன், லியம் நீசன், கேட்டி ஹோல்ம்ஸ், கேரி ஓல்ட்மன், சில்லியன் மர்பி, மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹான்ஸ் சிம்மர், ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் இசையமைத்துள்ளார்.

பேட்மேன் பிகின்ஸ்
Batman Begins
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புஎம்மா தாமஸ்
லாரி பிராங்கோ
சார்லஸ் ரோவன்
மூலக்கதைபாப் கேன் எழுதிய புதினத்தின் கதாப்பாத்திரங்கள்
திரைக்கதைகிறிஸ்டோபர் நோலன்
டேவிட் கோயர்
இசைஹான்ஸ் சிம்மர்
ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட்
நடிப்புகிரிஸ்டியன் பேல்
மைக்கேல் கெய்ன்
லியம் நீசோன்
கேட்டி ஹோல்ம்ஸ்
கேரி ஓல்ட்மன்
கில்லியன் மேர்பி
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுவால்லி பிச்டர்
படத்தொகுப்புலீ சிமித்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுசூன் 10, 2005 (2005-06-10)(இரசியா)
சூன் 15, 2005 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
இங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$372.71 மில்லியன் (2,665.5 கோடி)[1]

இத்திரைப்படம் சூலை 15 2005 அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடப்பட்டது. தனது முதல் வாரத்தில் $48 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்தது. உலகம் முழுவதும் மொத்தம் $372 மில்லியன் வருவாயினை ஈட்டித் தந்து.

விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன் "ப்ருஸ் வெய்ன்" தவறுதலாக அப்பகுதியில் உள்ள ஒரு பாழுங்கிணற்றுக்குள் விழுந்து விடுகிறான்.அதனுள் வசிக்கும் வௌவால்கள் இவனை கண்டவுடன் தாறுமாறாக பறக்கத் தொடங்குகின்றன.அவற்றின் கொடூர முகங்களை மிக அருகில் காணும் சிறுவன் பயத்தினால் மிரண்டு போகிறான்.அது அச்சிறுவனின் மனதில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது.பின்னர் ஓர் நாளில் தன் பெற்றோருடன் "மாஸ்க் ஃஒப் த சோரோ" நாடகத்தை பார்க்க செல்கிறான்.நாடகத்தின் இடையில் காட்டப்படும் வௌவால்களைக்கண்டு மன சஞ்சலம் அடைகிறான்.மீண்டும் அவனுக்கு அந்த கிணற்றுக்குள் நடந்த சம்பவங்கள் கண்முன்னே வந்து செல்ல நாடகத்தின் பாதியிலேயே பெற்றோருடன் வெளியேறிவிடுகிறான். வரும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் இவர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி அவர்களின் நகை,பணம் முதலியவற்றை கேட்க,திரு.வெய்ன் அவர்கள் அதை மறுக்க,திருடன் கையில் இருந்த துப்பாக்கி சாராமாரியாக சுடப்பட சம்பவ இடத்திலேயே பெற்றோர்களை இழக்கிறான் சிறுவன் வெய்ன்."டிம் பெர்டனின்" மட்டமான கற்பனையைப் போல அத்திருடன் ஜோக்கர் எல்லாம் அல்ல.வயிற்றுப் பசிக்காக கொள்ளையடிப்பவன்.ஆனால் போதைப் பொருளுக்கு அடிமையானவன் போலும். அதனால்தான் இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றுகிறான்.பல வருடஙகள் உருண்டோடுகின்றன.பதின்ம வயதின் நடுப்பகுதியை எட்டுகிறான் ப்ரூஸ்.கொலைக்குற்றதிற்கான நிரந்தர தண்டனை அளிக்கப்படாமல் இன்னும் அலைகழிக்கப்படுகிறான் அத்திருடன்.ப்ருஸ் "சட்டம் தண்டிக்கும் முன்னதாகவே நான் அவனை தண்டிக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன் நீதிமன்ற வளாகத்தினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து அவனை கொலை செய்ய யத்தனிக்கிறான்.ஆனால் வேறு ஒரு கும்பல் 'குற்றவாளி'யை தண்டித்து விடுகிறது.ப்ரூஸ் கொலை முயற்சியில் ஈடுப்பட்டதை அறியும் அவனது தோழி(Rachel) "உன் தந்தை உன் செய்கையை நினைத்தால் மிகவும் வெட்கப்படுவார்" என கூறுகிறாள்.இதுவும் அவனது நடத்தையில் பாரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது.தான் இந்நகரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என அக்கணம் நினைக்கிறான்.தனது திறனை விருத்தி செய்யும் முகமாகவும் உலகை வலம் வரும் முகமாகவும் 'பூட்டானு'க்கு செல்கிறான்.அங்கு "ஹென்றி டூகார்ட்" என்பவனை காண நேரிடுகிறது.அவனுடன் பழகும் ப்ரூஸ் விரைவிலேயே டூகார்ட்டுக்கு நெருங்கிய நண்பனுமாகுகின்றான்.ப்ருஸுக்கு தற்காப்புகலைகளை கற்றுதருவதுடன் "லீக் ஒப் ஷேடோவ்ஸ்" என்ற தற்காப்பு கலை அமைப்பிலும் அவனை இணைத்து பயிற்சியளிக்கிறான். விரைவிலேயே தற்காப்புகளைகளை நன்றாகக் கற்றுக்கொள்ளும் ப்ரூஸ் அவ்வமைப்பின் நோக்கம் கோதம் நகரை அழிப்பதுதான் என்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆத்திரமும் கொள்கிறான்.திடசங்கற்பத்துடன் செயற்படும் அவன் அவ்வைப்பு வளாகத்தை தீயிட்டு கொளுத்துகிறான். இத்திடீர் தாக்குதலால் அவ்வமைப்பின் தலைவன் ராஷ்-கல்(நீங்க ராஸ்கல்னே வச்சிக்குஙுக)மாண்டுபோகிறான். அதுட்டுமல்லாது இவ்விபத்தில் படுகாயமடையும் தனது நண்பனை உயிரை காப்பாற்றுகிறான் ப்ரூஸ்.தாய்நாடு திரும்பும் அவன் தன் நகரை காப்பாற்றுவதாக உறுதிபூணுகிறான்.இதற்காக அந்நகரின் நேர்மையான போலீஸ்காரரான கமிஷ்னர்.கோர்டான் அவர்களின் உதவியை கோருகிறான்.முதலில் மறுக்கும் அவர் பின் இவனது திடகாத்திர செயல்களைக்கண்டு சம்மதம் தெரிவிக்கிறார். இதே நேரம் புதிய நபர் ஒருவன் கோதம்மை பயங்கொள்ளச்செய்கிறான்.அவன்தான் "ஸ்கேயார் க்ரோ"(Scare crow).சதாரண சாக்கு துணியை முகமூடியாக அணிந்து கொள்ளும் இவன் மனிதர்களின் மேல் ஒரு திரவத்தை ஸ்பேரே செய்துவிடுவான்.அந்த திரவம் தெளிக்கப்பட்ட மனிதர்கள் பயத்தின் எல்லைக்கே சென்று விடுவர்.அவனது காமடியான முகம் அத்தருணத்தின் போது அவர்களுக்கு மிக கொடூரமாகக் காட்சியளிக்கும்.வசியம் செய்தது போல் தமக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் உளறத்தொடங்கி விடுவர்.இவனைப் பிடிக்கும் முதல் முயற்சியில் பேட்மேன் தோற்றுப்போனாலும் இரண்டாவது முயற்சியில் அவனது வழியிலேயே சென்று அவனை மடக்குகிறார்.அவனை விசாரித்து அவனது அடுத்து கட்ட திட்டங்கள் என்ன?அவன் யாருக்காக வேலை செய்கிறான் என்பதை அறியும் பேட்மேனுக்கு தலை சுற்ற தொடங்குகிறது.காரணம் அவன் வேலை செய்வது "லீக் ஒப் ஷாடோஸின்" தலைவனான ராஷ்-கல் இடமாகும்.ராஷ்-கல் இறக்கவில்லை உண்மையான ராஷ்-கல் பேட்மேன் காப்பாற்றிய ஹென்றி டூகார்ட் ஆவான்.அவன் முதற்கட்டமாக ப்ரூஸின் இருப்பிடத்தை அழிக்கிறான்.பின்னர் அவனது நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்.பல இறுதி கட்ட சண்டைகளின் பின் பேட்மேன் ப்ரூஸின் நிறுவனத்தையும் கோதம் நகரத்தையும் காப்பாற்றுகிறான்.ராஷ்-கல் ரயில் விபத்தில் இறக்கிறான்.இறுதியில் பேட்மேன் கமிஷ்னர் கோர்டானை சந்திக்கிறான்.அப்போது கோர்டான் மீண்டும் நகரில் குற்றங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளதாகவும்.அதில் குற்றவாளி ஒருவன் சம்பவ இடங்களில் கோமாளி படம் பொரித்த சூதாட்ட அட்டைகளை விட்டு செல்வதாகவும் கூறுவதோடு படம் முடிகிறது.

இத்திரைப்படம் நோலனின் பேட்மேன் முப்பட தொடரின் முதல் திரைப்படமாகும். இப்படத்தினைத் தொடர்ந்து த டார்க் நைட் திரைப்படம் சூலை 2008 இல் வெளியானது. இத்தொடரின் கடைசித் திரைப்படம் த டார்க் நைட் ரைசஸ் சூலை 2012 இல் வெளியாகிறது.

கதாப்பாத்திரங்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

வளர்ச்சி

தொகு

சனவரி 2003 இல் வார்னர் சகோதரர்கள் மெமன்டோ திரைப்பட இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனை ஓர் பேட்மான் திரைப்படம் ஒன்றை எடுக்க அழைத்தது.[2] மேலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு டேவிட் கோயர் என்பவரை திரைக்கதை எழுத வைத்தது.[3] மீண்டும் புதியதாக பேட்மான் திரைப்படங்களை உருவாக்க நோலன் தனது விருப்பத்தை தெரிவித்தார். மேலும் பேட்மானின் அசல் கதையினை வெளிக்கொண்டு வரப்போவதாக கூறினார்.[4] 1978 இல் வெளியான ரிச்சர்ட் டான்னரின் சூப்பர்மேன் திரைப்படமே தனது உந்துகோல் என்று நோலன் கூறினார்.[5] சூப்பர்மேன் திரைப்படத்தைப் போன்றே பேட்மான் திரைப்படத்திலும் சிறந்த நடிகர்களை நடிக்க வைக்க விருப்பபட்டார். அதனால் கதைக்கும் திரைப்படத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பினார்.[6]

படப்பிடிப்பு

தொகு

தனது பிற திரைப்படங்களைப் போலவே திரைப்படமெடுக்க மற்றொரு குழுவினை பயன்படுத்துவதை தவிர்த்தார். தனது மேற்பார்வையிலேயே அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று நம்பினார்.[7]

படப்பிடிப்பு மார்ச் 2004 இல் தொடங்கியது. நோலன் திரைப்படத்தின் காட்சிகள் நிறையவற்றை இங்கிலாந்திலேயே எடுத்தார்.[8] இத்திரைப்படத்தினை அனைத்து வயதினோரும் பார்க்குமாறு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதற்காக கோரமான காட்சிகளைத் தவிர்த்தார்,[9]

படப்பிடிப்பு நடந்த இடங்கள்

தொகு
  • வத்னஜோகு பனிப்பாறை, ஐஸ்லாந்து.[7][10]
  • செப்பர்டன் ஸ்டுடியோஸ், இங்கிலாந்து.[8][11]
  • விமான நிலையம், கார்டிங்க்டன், பெட்போர்ட்ஷையர், இங்கிலாந்து[11][12]
  • மேன்ட்மோர் டவர்கள் [13]
  • தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம், மில் ஹில், வடமேற்கு இலண்டன், இங்கிலாந்து.[14]
  • பல்கலைக்கழக கல்லூரி, இலண்டன்[11]
  • சிகாகோ, இல்லியனாய்ஸ், ஐக்கிய அமெரிக்கா[7][15]

வடிவமைப்பு

தொகு

நோலன் 1982 இல் வெளியான பிளேட் ரன்னர் திரைப்படத்தினை உந்துகோலாக பயன்படுத்தினார். அத்திரைப்படத்தினை தன் திரைப்படக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டி அந்த வகையில் திரைப்படத்தினை எடுக்க வேண்டும் என்றார்.[16]

நேதன் கிரோவ்லி திரைப்படத்திற்காக கொதம் மாநகரத்தினை வடிவமைத்தார்.[13] இதற்காக நியூ யார்க், சிகாகோ, டோக்கியோ, ஹாங்காங் போன்ற நகரங்களின் பகுதிகளை பயன்படுத்தினார்.[17]

பேட்மோபில்

தொகு

கொதம் நகரத்தை வடிவமைத்த நேதன் கிரோவ்லியே பேட்மொபிலினை வடிவமைத்தார். நான்கு மாதங்களில் மொத்தம் ஆறு வடிவமைப்புகளை செய்தார். பின்னர் தேர்வு செய்யப்பட்ட பேட்மொபில் வடிவமைப்பினை பிலாஸ்டிக்கில் உருவாக்க இரண்டு மாதங்கள் ஆகின.[18] பின்னர் எஃகு பயன்படுத்தி வாகனத்தின் உடம்பு மட்டும் தயாரிக்கப்பட்டது.

வாகனத்தின் தயாரிப்பு ஒன்பது மாதங்களானது. பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.[18]

பேட்மொபில் திரைக்காட்சிகள் சிகாகோ தெருக்களில் படமாக்கப்பட்டது.[18]

இசையமைப்பு

தொகு

ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஜேம்ஸ் நியூடன் ஹவார்ட் ஆகியோரால் இசையமைக்கப்பட்டது. முதலில் ஹான்ஸ் சிம்மரை மட்டுமே இசையமைக்க அழைத்தார். பின்னர் சிம்மரின் வேண்டுகோளின்படி ஜேம்ஸ் நியூடன் ஹவார்தினையும் அழைத்தார்.[19] இருவரும் தனித்தனியாக புரூஸ் வேய்னின் இரு (பேட்மேன் மற்றும் தொழிலதிபர்) முகங்களுக்கு இசையமைத்தனர். முதலில் லாஸ் ஏஞ்செலஸ்சில் இசையமைக்க ஆரம்பித்தனர். பின்னர் இருவரும் இலண்டணிற்கு சென்று பன்னிரண்டு வாரங்களாக சேர்ந்து இசையமைத்தனர்.[20] தங்கள் இசையினை மேலும் மேம்படுத்த பேட்மேன் பிகின்ஸ் படப்பிடிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.[21] ஹான்ஸ் சிம்மர் முந்தைய பேட்மேன் திரைப்படங்களில் பயன்படுத்திய இசையினை முற்றிலும் தவிர்க்க முயன்றார். ஆனால் முழுமையாக தவிர்க்க இயலவில்லை.

இரு இசையமைப்பாளர்களும் இணைந்து திரைப்படத்திற்காக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இசையமைத்தனர்.[19][21]

மேற்கோள்கள்

தொகு
  1. Batman Begins at Box Office Mojo
  2. Fleming, Michael (சனவரி 27, 2003). "'Batman' captures director Nolan". Variety. http://www.variety.com/article/VR1117879566. பார்த்த நாள்: நவம்பர் 2, 2006. 
  3. Brodesser, Claude; Dunkley, Cathy (மார்ச்சு 26, 2003). "Inside Move: WB jump starts Batmobile". Variety. http://www.variety.com/article/VR1117883691. பார்த்த நாள்: நவம்பர் 2, 2006. 
  4. Graser, Marc; Dunkley, Cathy (பிப்ரவரி 8, 2004). "The bat and the beautiful". Variety. http://www.variety.com/article/VR1117899714.html. பார்த்த நாள்: நவம்பர் 2, 2006. 
  5. Smith, Adam (ஜூலை 2005). "The Original American Psycho". Empire (magazine): pp. 74–80, 82, 84, 87. https://archive.org/details/iamamerica00smit. 
  6. The Journey Begins: Creative Concepts [DVD, 2005]
  7. 7.0 7.1 7.2 "Batman Begins Production Notes – The Batsuit & Gadgetry". வார்னர் புரோஸ். Archived from the original on 2014-08-18. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 6, 2006.
  8. 8.0 8.1 "`Batman Begins' goes to the source". The Kansas City Star. சூன் 25, 2004. 
  9. "'Batman Begins' press conference, part two". Time Out London. சூன் 16, 2005. Archived from the original on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 13, 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. Journey to Discovery [DVD, 2005]
  11. 11.0 11.1 11.2 Kalindjian, Claudia (2005). Batman Begins: The Official Movie Guide. Time Warner International. pp. 144–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-932273-44-1.
  12. "Airship hangar is home to Batman". BBC News Online. பிப்ரவரி 20, 2004. http://news.bbc.co.uk/2/hi/uk_news/england/beds/bucks/herts/3506175.stm. பார்த்த நாள்: நவம்பர் 2, 2006. 
  13. 13.0 13.1 Gotham City Rises [DVD, 2005]
  14. Kasriel, Alex (சூன் 16, 2005). "From leafy suburbs to silver screen". Edgware & Mill Hill Times. http://www.times-series.co.uk/news/606532.0/?utag=8269. பார்த்த நாள்: ஏப்ரல் 23, 2010. 
  15. "35 East Wacker Drive". Emporis. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 23, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. Jankiewicz, Pat (ஆகத்து 2005). "Dark Knight Resurrected". Starlog. 
  17. Otto, Jeff (சூன் 5, 2006). "Interview: Christopher Nolan". IGN. Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 6, 2006.
  18. 18.0 18.1 18.2 Brain, Marshall. "How the Batmobile Works". HowStuffWorks. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 23, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. 19.0 19.1 Graydon, Danny (ஜூலை 2005). "A Little Knight Music". Empire (magazine): p. 87. 
  20. D., Spence (சூன் 10, 2005). "Batman Vs. Hans Zimmer & James Newton Howard Part 1". IGN. Archived from the original on 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 1, 2006.
  21. 21.0 21.1 D., Spence (சூன் 13, 2005). "Batman Vs. Hans Zimmer and James Newton Howard Part 2". IGN. Archived from the original on 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 1, 2006.

வெளி இணைப்புகள்

தொகு