எம்மா தாமஸ்

எம்மா தாமசு நோலன்[1] (ஆங்கில மொழி: Emma Thomas Nolan) (பிறப்பு: திசம்பர் 9, 1971) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பவரின் மனைவி ஆவார்,[2] இவர் இவரது கணவர் இயக்கிய பேட்மேன் பிகின்ஸ் (2005), த பிரஸ்டீஜ் (2006), த டார்க் நைட் (2008), இன்சப்சன் (2010), த டார்க் நைட் ரைசஸ் (2012), மேன் ஆப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) போன்ற பல திரைப்படங்களில் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தன் கணவருடனும் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் வசிக்கின்றார். தாமஸ் தனது வாழ்க்கை முழுவதும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார், இதில் ஒன்று அகாதமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருது மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருது ஆகியவை அடங்கும். இந்த விருதுகள் வாழ்க்கை வரலாற்று திரில்லர் படமான ஓப்பன்கைமர் தயாரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளன. (2023)

எம்மா தாமஸ்
பிறப்புஎம்மா தாமசு நோலன்
திசம்பர் 9, 1971 (1971-12-09) (அகவை 52)
இலண்டன், இங்கிலாந்து
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்டோபர் நோலன் (1997–இன்றுவரை)

தயாரித்தத் திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Superior Court of The State of California for the County of Los Angeles" (PDF). The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.
  2. Breznican, Anthony (15 July 2010). "With 'Inception', Chris Nolan's head games continue". USA Today. https://www.usatoday.com/life/movies/news/2010-07-15-inception15_CV_N.htm. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_தாமஸ்&oldid=3924727" இலிருந்து மீள்விக்கப்பட்டது