ஓப்பன்கைமர் (திரைப்படம்)

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருந்த திரைப்படம்

ஓப்பன்கைமர் (Oppenheimer) என்பது 2023 இல் வெளிவந்த வாழ்க்கை வரலாற்று பரபரப்பூட்டும் ஆங்கிலத் திரைப்படம் ஆகும்.[5][6][7] கிறிஸ்டோபர் நோலன் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டிருந்தார்.[8] அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் இரண்டாம் உலகப் போரின் போது மன்காட்டன் திட்டத்தில் முதல் அணுவாயுதங்களைத் தயாரித்ததில் பெரும் பங்காற்றி "அணுகுண்டின் தந்தை" என்ற பெருமையைப் பெற்ற ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமராக கில்லியன் மேர்பி நடித்திருந்தார். இத்திரைப்படம் ஓப்பன்கைமரின் வாழ்க்கையை விவரிக்கிறது, கதை முக்கியமாக அவரது படிப்பை மையமாகக் கொண்டது, இரண்டாம் உலகப் போரின் போது லாஸ் அலமோசு ஆய்வகத்தில் அவரது பணி, அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியுடனான தொடர்பு, அதனைத் தொடர்ந்து 1954 இல் அவர் மீதான பாதுகாப்பு விசாரணை, பாதுகாப்பு அனுமதி நீக்கம் போன்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஓப்பன்கைமரின் மனைவி கிட்டியாக எமிலி பிளண்ட், மன்காட்டன் திட்டத் தலைவராக மேட் டாமன், ஐக்கிய அமெரிக்க அணுசக்திப் பொறுப்புக் குழு உறுப்பினராக ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகியோரும் நடித்திருந்தனர். துணை நடிகர்களாக புளோரன்சு புயூ, ஜோஷ் ஹர்த்நேட், ராமி மலேக், கென்னத் பிரனா ஆகியோரும் நடித்தனர்.

ஓப்பன்கைமர்
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்பு
திரைக்கதைகிறிஸ்டோபர் நோலன்
இசைலுட்விக் கர்ரான்சன்
நடிப்பு
ஒளிப்பதிவுஹொயிட் வேன் ஹொய்டெமா
படத்தொகுப்புஜெனிபர் லேம்
கலையகம்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசூலை 11, 2023 (2023-07-11)(கிறாண்டு இறெட்சு)
சூலை 21, 2023 (ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்180 நிமி.[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்.[2]
மொத்த வருவாய்$960.9 மில்.[3][4]

அதன் பல விருதுகளில், ஓப்பன்ஹைமர் 2023 ஆம் ஆண்டின் முதல் பத்துத் திரைப்படங்களில் ஒன்றாக தேசிய மதிப்பாய்வு வாரியம், அமெரிக்கத் திரைப்படக் கழகம் ஆகியவற்றால் பெயரிடப்பட்டது. 81-ஆவது கோல்டன் குளோப் விருதுகளில் (சிறந்த திரைப்படம் உட்பட) ஐந்து விருதுகள், 77-ஆவது பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (சிறந்த திரைப்படம் உட்பட) ஏழு விருதுகள், 30-ஆவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் (SAG) விருதுகளில் மூன்று விருதுகள், 96-ஆவது அகாதமி விருதுகளில் (சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட) ஏழு விருதுகளும் 13 பரிந்துரைகளும் பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "Oppenheimer (15)". திரைப்பட வகைப்பாட்டிற்கான பிரித்தானிய வாரியம். July 6, 2023. Archived from the original on July 6, 2023. பார்க்கப்பட்ட நாள் July 6, 2023.
  2. Keegan, Rebecca (July 14, 2023). "'This Can't Be Safe. It's Got to Have Bite': Christopher Nolan and Cast Unleash Oppenheimer". The Hollywood Reporter. Archived from the original on July 20, 2023. பார்க்கப்பட்ட நாள் July 15, 2023.
  3. "Oppenheimer". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் March 11, 2024.
  4. "Oppenheimer". த நம்பர்சு. நேஷ் இன்பர்மேசன் சர்விசசு, எல்.எல்.சி. பார்க்கப்பட்ட நாள் March 11, 2024.
  5. Tuccillo, Andrea; Thompson, Mary Pat (July 20, 2023). "'Oppenheimer' cast on Christopher Nolan's very epic, unconventional atomic bomb biopic". Archived from the original on August 25, 2023. பார்க்கப்பட்ட நாள் October 11, 2023.
  6. Nicholson, Tom (August 25, 2023). "Are We Entering a New Golden Age of Historical Epics?". Esquire. Archived from the original on August 26, 2023. பார்க்கப்பட்ட நாள் January 18, 2024.
  7. Bob Mondello (July 20, 2023). "Nolan's thriller 'Oppenheimer' is a monument to science and the arrogance of genius". NPR இம் மூலத்தில் இருந்து July 21, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230721025115/https://www.npr.org/2023/07/20/1189065332/nolans-thriller-oppenheimer-is-a-monument-to-science-and-the-arrogance-of-genius. 
  8. Scott, A. O. (October 21, 2023). "Are Fears of A.I. and Nuclear Apocalypse Keeping You Up? Blame Prometheus. - How an ancient Greek myth explains our terrifying modern reality.". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து October 21, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231021101019/https://www.nytimes.com/2023/10/21/books/review/robert-oppenheimer-john-von-neumann-prometheus.html. பார்த்த நாள்: October 21, 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்பன்கைமர்_(திரைப்படம்)&oldid=3908057" இலிருந்து மீள்விக்கப்பட்டது