முதன்மை பட்டியைத் திறக்கவும்

கோட்பாட்டு இயற்பியல்

கோட்பாட்டு இயற்பியல்தொகு

கோட்பாட்டு இயற்பியல் இயற்பியலின் ஒருபகுதியாகும். கணித மாதிரிகள், இயற்பியல் பொருள்கள் மற்றும் அமைப்புகளின் இயற்கை நிகழ்வுகளை பகுத்தறிய, விளக்க மற்றும் கணிக்க கருத்தியல் கோட்பாடுகளை பயன்படுகின்றனர். சோதனையை அடிப்படையாக கொண்ட இயற்பியலில் இயல்நிகழ்ச்சியை ஆய்வு செய்ய சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அறிவியல் வளர்ச்சி பரிசோதனைகள், ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.

சிலவேளைகளில் கோட்பாட்டுவாத இயற்பியல் சோதனை மற்றும் அவதானிப்புகளை குறைவாகவும் , கடினமான கணித முறைகளை அதிகளவிலும் பயன்படுத்துகின்றது. உதாரணமாக சிறப்புச் சார்புக் கோட்பாடு விருத்தி நிலையில் இருந்த போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மேக்ஸ்வெல் சமன்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், லாரன்ஸ் நிலைமாற்றத்தையே அதிகம் கருத்தில் கொண்டார் .ஆனாலும் அவர் மைக்கல்சன்-மார்லே சோதனையில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளை, முன்னர் வரை கோட்பாட்டு அடிப்படையில் விளக்கப்படாமல் இருந்த ஒளிமின் விளைவை விளக்கி கூறியதால் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்பாட்டு_இயற்பியல்&oldid=2724003" இருந்து மீள்விக்கப்பட்டது