அண்டவெளி புழுத்துளை

இயற்பியலில் அண்டவெளி புழுத்துளை (wormhole) என்பது ஒரு வெளிநேரம் பற்றிய உருவவியல் கருதுகோளாகும். இது அடிப்படையில் வெளிநேரம் சார்ந்த ஒரு சுருக்கவழி ஆகும். அண்டவெளி புழுத்துளை குறித்து அவதானிக்கக் கூடிய சான்றுகள் எதுவுமில்லை. ஆனால் அண்டவெளி புழுத்துளையினை உள்ளடக்கும் பொதுச் தொடர்பியக்கம் குறித்து கொள்கை ரீதியிலான சமன்பாடுகளுக்கான வலுவான தீர்வுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக, தொடர்பியக்கம் பற்றிய கற்கைகளில் அண்டவெளி புழுத்துளை முக்கியமுடையதாக கருதப்படுகின்றது. முதல் வகையான அண்டவெளி புழுத்துளை தீர்வு சுக்வாசைல்ட்டு அண்டவெளி புழுத்துளை எனப்படும். இது சாசுவதமான கருந்துளை பற்றி விபரிக்கிறது.

சுக்வாசைல்ட்டு அண்டவெளி புழுத்துளையினை விளக்கும் கட்டமைப்பு மாதிரி

புழுத்துளை பெயர்க்காரணம்தொகு

ஆப்பிள் ஒன்றின் மீது வாழும் இரு புழுக்களைக் கருதும் போது, முதல் புழு 'நீளம் அகலம்' என்ற வெறும் இரண்டு பரிமாணங்களை கொண்ட பரப்பளவாக மட்டுமே அறிந்துள்ளது. 'ஆழம்' என்ற பரிமாணத்தைப் பற்றி அதற்கு தெரியாது. இரண்டாவது புழு புதிய பரிமாணங்களைத் தேடி ஆப்பிளைச் சுற்றிக் கொண்டு செல்கிறது. இதை, முதல் புழு மற்றொரு புழு தொடுவானில் மறைந்து விட்டது என்று கருதிக்கொள்ளும், இரண்டாவது புழு ஆப்பிளை சுற்றி வரும் போது ஆப்பிள் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது பரிமாணத்தில் வளைந்துள்ளது என்ற முடிவுக்கு வரும். இரண்டாவது புழு, இப்போது ஆப்பிளின் மறுபக்கத்துக்கு செல்ல மூன்றாவது பரிமாணத்தின் வழியே ஆப்பிளைத் துளைத்துச் செல்லலாம் என்று கணிக்கிறது. இந்தத் துளைகளின் வழியே செல்லும் போது நேரத்தையும் தூரத்தையும் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்ற முடிவுக்கும் வருகிறது. இந்த 'புதைகுழிகளுக்கு' பெயர் தேடிக் கொண்டிருந்த போது ஜான் வீலர் (John Archibald Wheeler), ஒரு ஆப்பிள் புழு ஒன்று துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து இந்தப் பெயர் வைத்தார். அதாவது WORM HOLE - புழுத்துளை.

குறிப்புகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டவெளி_புழுத்துளை&oldid=2266989" இருந்து மீள்விக்கப்பட்டது