நுண்மமாக்கல்
நுண்ணிலையாக்கல் (abstraction) என்பது ஒரு கருத்தையோ, பொருளைப் பற்றிய அறிவையோ, விளைவையோ பொதுமைப்படுத்தி அல்லது அதன்/அவற்றின் பொது பண்புகளை பிழித்து மேல் நிலைத் தளத்தில் (meta -leval) வைத்து விளக்குவதைக் குறிக்கும்.
abstract, abstraction ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ் சொற் தோடல்கள் பல களங்களில் இடம்பெற்றன, தொடர்ந்து இடம்பெறுகின்றது. பின்வருவன அவற்றுள் சில:
- அபூதியாக - இராம.கி - ( பூதியல் என்றால் பொருள் என்றும் அபூதியாக என்றால் நுண்பொருள் அல்லது கருத்துப் பொருள்
சுருக்கம் என்ற கருத்தோட்டத்தில்,
- பொழிப்பு
- கருத்தியல்
- "பிண்டமில்லாத", "அருவமான"நுண்ணிலையான"
ஆகிய சொற்கள் வகைதொகையின்றித் தாந்தோன்றிப் போக்கில் பயன்படுத்தப்படுகின்றன்.
அறிவின் படைப்பு
தொகு“ | தொடக்கத்தில் ஆண் யானைக்கும் ஒரு பெயரும் பெண் யானைக்கு ஒரு பெயருமாகக் களிறு பிடி என்னும் சொற்கள் வழங்கியிருக்க கூடும்; நெடுங்காலம் கழித்தே இரண்டனுக்கும் பொதுவான யானை என்னும் சொல் வழங்க முடிந்திருக்கும். ஆண் பெண் இரண்டும் அல்லாத பொதுத்தன்மை உடைய 'யானை' என்னும் உயிர் எங்கும் இல்லை. களிறு உண்டு, பிடி உண்டு; இவை பருப்பொருட்கள்; கண்ணால் காண்பன. ஆனால் யானை எங்கும் இல்லை; இது நுண்பொருள்; அறிவால் மட்டும் உய்த்துணரக்கூடிய பொதுத்தன்மை உடையது இது. | ” |
மேலே தரப்பட்டுள்ள மு.வரதராசனாரின் கூற்றை[1] நோக்குகையில் நுண்பொருள் என்பது அறிவின் துணை கொண்டு உய்துணரக்கூடியவற்றை குறிப்பதைக் காணலாம். மேலும் நுண் என்னும் வேர்ச்சொல் அனைத்துத் திராவிட மொழிகளிலும் கிளைத்து அடிப்பொருள் என்பதை மையமாகக் கொண்ட பல சிறப்புப் பொருள்களைக் கொண்டு திகழ்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ மு. வரதராசன். (1954). மொழி வரலாறு. சென்னை: கழக வெளியீடு.
- ↑ "Proto-South Dravidian : *nuṇ-". திராவிட வேர்ச்சொல் அகரமுதலி. அணுகப்பட்டது 2011-12-08.