அட்லஸ் என்டர்டெயின்மென்ட்

அட்லஸ் என்டர்டெயின்மென்ட் (Atlas Entertainment) என்பது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நிதி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது சார்லஸ் ரோவன், பாப் கேவல்லோ மற்றும் டான் ஸ்டீல் ஆகியோரால் 1995 இல் ஆரம்பிக்கட்டது.[1]

அட்லஸ் என்டர்டெயின்மென்ட்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1995
தலைமையகம்லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படம் தயாரித்தல் மற்றும் நிதி
துணை நிறுவனங்கள்அட்லஸ் கலைஞர்
மொசைக் மீடியா குழு

இந்த நிறுவனத்தின் மூலம் பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), சூசைட் ஸ்க்வாட் (2016), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக் (2017), வொண்டர் வுமன் 1984 (2020) போன்ற பல திரைப்படங்களை இணைந்து தயாரித்துள்ளது.

வரலாறுதொகு

1990 ஆம் ஆண்டில் சார்லஸ் ரோவன் மற்றும் கூட்டாளர் பாப் கேவல்லோ[2] ஆகியோரால் 'ரோவன்/கேவல்லோ என்டர்டெயின்மென்ட்டை' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கட்டது. அதே நேரத்தில்சார்லஸ் ரோவனின் மனைவியான டான் ஸ்டீல் என்பவர் முன்பு கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் 'ஸ்டீல் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஒன்றை உருவாக்கி த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸுடன் சிறப்புப் படங்களைத் தயாரிக்க ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர்.[3] அதை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில் அட்லஸ் என்டர்டெயின்மென்ட் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க ரோவன்/கேவல்லோ என்டர்டெயின்மென்ட்டை ஸ்டீல் பிக்சர்ஸ் உடன் இணைத்தனர். மேலும் இது டர்னர் பிக்சர்ஸ் உடன் ஒரு பிரத்யேக திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.[4]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு