ஜஸ்டிஸ் லீக் (திரைப்படம்)

௨௦௧௭-ல் வெளிவந்த சூப்பர் ஹீரோ திரைப்படம்

ஜஸ்டிஸ் லீக் (ஆங்கில மொழி: Justice League) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய மீநாயகன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், அட்லஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

ஜஸ்டிஸ் லீக்
இயக்கம்சாக் சினைடர்
தயாரிப்பு
  • சார்லஸ் ரோவன்
  • டெபோரா சினைடர்
  • ஜான் பெர்க்
  • ஜெஃப் ஜான்ஸ்
மூலக்கதைடிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரங்கள்
திரைக்கதை
இசைடேனி எல்ப்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுஃபேபியன் வாக்னர்
படத்தொகுப்பு
  • டேவிட் பிரென்னர்
  • ரிச்சர்ட் பியர்சன்
  • மார்டின் வால்சு
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 26, 2017 (2017-10-26)(பெய்ஜிங்)
நவம்பர் 17, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்120 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$300 மில்லியன்[2]
மொத்த வருவாய்$657.9 மில்லியன்[3]

இப் படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஐந்தாவது[4][5][6] திரைப்படமாகவும் 2016 ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற திரைப்படத்தின் தொடர்சியாகவும் வெளியானது. சாக் சினைடர் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ் டெரியோ மற்றும் ஜோஸ் வேடன் ஆகியோர் திரைக்கதை எழுத, பென் அஃப்லெக், ஹென்றி கவில், ஏமி ஆடம்சு, கால் கடோட், எசுரா மில்லர், ஜேசன் மோமோவா, ரே பிஸ்சர், ஜெர்மி அயர்ன்ஸ், டையேன் லேன், கோனி நீல்சன் மற்றும் ஜே. கே. சிம்மன்சு போன்ற பலர் நடித்துள்ளார்கள். படத்தில், பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் ஆகியோர் இணைந்து சூப்பர்மேனின் மரணத்திற்கு பிறகு உலகத்தை ஸ்டீபன்வொல்ப் மற்றும் அதன் பாராட்மான்சு படைகளிடமிருந்து காப்பாற்ற தி பிளாஷ், அக்குவாமேன் மற்றும் சைபர்க் ஆகியோரை உருவாக்குவது தான் கதை.

ஜஸ்டிஸ் லீக் படம் நவம்பர் 13, 2017 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது. நவம்பர் 17, 2017 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் 657 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்தாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது படமாகவே கருதப்பட்டது. வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 60 மில்லியன் டாலர் நஷ்டம் என அறிவிக்கப்பட்டது.

வரவேற்பு

தொகு

வசூல்

தொகு

ஜஸ்டிஸ் லீக் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் 229 மில்லியன் வசூல் செய்தது. மற்ற நாடுகளில் $ 428.9 மில்லியன் என மொத்தம் $ 657.9 மில்லியன் வசூல் செய்தது இப்படம். இப்படம் அதன் முதல் நாளில் மட்டும் $ 278.8 மில்லியன் வசூல் செய்தது. [7][8] எனினும் டெட்லைன் ஹாலிவுட்டின் படி இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 60 மில்லியன் நஷ்டத்தைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.[9][10][11] ஸ்டூடியோ பணத்தை இழந்ததன் காரணமாக, இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் குண்டு அல்லது "தோல்வியடைந்த படம்" என்று கருதப்பட்டுகிறது.[12][13][14][15][16][17]

மேற்கோள்கள்

தொகு
  1. "Justice League [2-D]". British Board of Film Classification. நவம்பர் 7, 2017. Archived from the original on நவம்பர் 9, 2017. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 9, 2017.
  2. "'Justice League': Warner Bros. CEO Reportedly Mandated a Runtime Under 2 Hours". Collider. நவம்பர் 6, 2017. Archived from the original on நவம்பர் 8, 2017. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 9, 2017.
  3. "Justice League (2017)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on நவம்பர் 19, 2017. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 16, 2018.
  4. Mithaiwala, Mansoor (நவம்பர் 18, 2017). "Do You Need To See Batman V Superman To Understand Justice League?". Screen Rant.
  5. Fitch, Adam (ஆகத்து 28, 2017). "Justice League a 'Direct Sequel' to Batman v Superman". Comic Book Resources.
  6. Villaverde, Noah (ஆகத்து 27, 2017). "How 'Justice League' Serves As A Direct Sequel To 'Batman V Superman'". Heroic Hollywood.
  7. Tartaglione, Nancy (நவம்பர் 19, 2017). "'Justice League' Lassos $185.5M Overseas, $281.5M WW; 'Thor' Rocks To $738M Global – International Box Office". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 19, 2017.
  8. Lopez, Ricardo (நவம்பர் 16, 2017). "Can Warner Bros.' Expensive, Long-Awaited 'Justice League' Deliver the Hit That DC Needs?". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 16, 2017.
  9. Rob Cain (நவம்பர் 20, 2017). "Warner Bros. Faces A Possible $500M To $1000M Loss On 'Justice League'". பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 4, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. Zack Sharf (நவம்பர் 24, 2017). "'Justice League' Box Office Bomb: Warner Bros. Could Lose Up to $100 Million on Superhero Tentpole". பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 4, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. D'Alessandro, Anthony (மார்ச்சு 31, 2018). "'Ready Player One' Zaps $12M+ Opening Day; $52M+ Four-Day Weekend – Friday AM Update". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 31, 2018.
  12. Sims, David (2017-11-20). "'Justice League': When a $94 Million Opening Weekend Is a Flop". பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
  13. "'Justice League' Is A Historic Box Office Bomb For Warner Bros". 2017-11-24. பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
  14. "How Justice League Became a Box Office Disaster". 2017-11-28. பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
  15. Mendelson, Scott. "'Justice League' Is The Highest-Grossing Box Office 'Bomb' Ever". பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
  16. Riesman, Abraham (2017-12-07). "Warner Bros. Reportedly Shaking Up Its Superheroes Post–Justice League". பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.
  17. "4 reasons 'Justice League' has flopped at the box office". பார்க்கப்பட்ட நாள் 2018-09-14.

வெளி இணைப்புகள்

தொகு