ஜேசன் மோமோவா

அமெரிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.

ஜோசப் ஜேசன் நமக்கீஹா மோமோவா (ஆங்கில மொழி: Joseph Jason Namakaeha Momoa) (பிறப்பு: ஆகத்து 1, 1979) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் இராணுவ அறிவியல் தொடரான 'இசுடார்கேட் அட்லாண்டிசு' (2004-2009) என்ற தொடரில் 'ரோனன் டெக்ஸ்' என்ற கதாப்பாத்திரத்திலும் எச்பிஓ கற்பனைத் தொடரான கேம் ஆஃப் துரோன்சு (2011-2012) என்ற தொடரில் 'கல் ட்ரோகோ' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

ஜேசன் மோமோவா
பிறப்புஜோசப் ஜேசன் நமக்கேஹா மோமோஆ
ஆகத்து 1, 1979 (1979-08-01) (அகவை 45)
ஹொனலுலு, அவாய், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லிசா போனெட் (2017-2022)
பிள்ளைகள்2
வலைத்தளம்
jasonmomoa.com

இவர் வாள் மற்றும் மாயாசாலப் படமான 'கோனான் தி பார்பேரியன்' என்ற படத்தில் நடித்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் அக்வாமேனை சித்தரித்து வெளியான ஜஸ்டிஸ் லீக் (2017), அக்வாமேன் (2018),[1][2][3] சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) அக்வாமேன் அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஜேசன் மோமோவா ஆகத்து 1, 1979 ஆண்டு அவாயில்[4] உள்ள ஹொனலுலு என்ற இடத்தில கோனி என்ற புகைப்பட கலைஞருக்கும், ஜோசப் மோமோ என்ற ஓவியருக்கும் மகனாக பிறந்தார்.[5] இவரது தந்தை அவாய்யை பூர்வீகமாகக்கொண்டவர்[6][7][8] மற்றும் தாயார் செருமானிய, ஐரிய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் அயோவாவின் நார்வாக்கில் அவரது தாயால் வளர்க்கப்பட்டார்.

வாழ்க்கைப் பயணம்

தொகு

இவர் 1998 ஆம் ஆண்தடில் டகேயோ கோபயாஷி[9] என்ற சர்வதேச ஆடை வடிவமைப்பாளர் இவரது தோற்றத்தைக்கண்டு மாதிரி துறைக்குள் நுழைய ஊக்கப்படுத்தினார். அதை தொடர்ந்து 1999 இல் ஆண்டு 'அவாய் மாடல் ஆப் தி இயர்' பட்டத்தை வென்றார். இவர் தனது 19 ஆம் வயதில் அதிரடி தொலைகாட்சி தொடரான பேவாட்ச்:ஹவாய்-ல் ஜேசன் லோன் (1999-2001)[10] என்ற கதாப்பாத்திரத்திரம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து நார்த் ஷோர் (2004), ஜான்சன் பேமிலி வக்கேசன்(2004-2005), தி கேம் (2009), ஸ்டார்கேட் அட்லாண்டிஸ்(2004-2009), கேம் ஆஃப் துரோன்சு (2011-2012)[11] போன்ற பல தொடர்களில் நடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் 2005 இல் லிசா போனட் என்ற நடிகையுடன் நட்பு ஏற்பட்டது.[12] இருவரும் நவம்பர் 15, 2007 இல் திருமணம் செய்துகொண்டதாக முன்னர் நம்பப்பட்டாலும், இந்த ஜோடி அக்டோபர் 2017 வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.[13] ஜூலை 2007 ஆம் ஆண்டில் அன்று லோலா லோலானி என்ற பெண் குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து திசம்பர் 2008 இல் அன்று பிறந்த மகனுக்கு நோகோவா எனப் பெயரிட்து.[14] சனவரி 2022 இல், மோமோவாவும் போனட்டும் தங்கள் திருமணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.[15]

தற்காப்புக் கலைகள்

தொகு

இசுடார்கேட் அட்லாண்டிசு என்ற தொடருக்காகவும் கோனன் தி பார்பேரியன் என்ற படத்திற்காகவும் தற்காப்புக் கலைகளைக் கற்றார். மேலும் 2017 ஆம் ஆண்டில் ப்ரஜிலியன் ஜீஉ-ஜிட்சு என்ற கலையையும் கற்றார்.

முகத்தழும்பு

தொகு

இவர் 2008 நவம்பர் 15 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த சண்டையில் சகவாடிக்கையாளர் இவரைத் தாக்கியதால் இவரது முகத்தில் ஏறத்தாழ 140 தையல் போடப்பட்டது.[16][17] பிறகு தகுந்த சிகிச்சையின் மூலம் தழும்பு மறைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dice, Andrew (October 15, 2014). "It's Official: Jason Momoa is 'Aquaman'; Solo Movie Coming 2018". Screen Rant. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  2. "DC Comics Movies Announced: 'Suicide Squad,' 'Wonder Woman,' 'Justice League,' 'The Flash,' 'Aquaman'". Slashfilm. October 15, 2014. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  3. Kroll, Justin (June 3, 2015). "James Wan to Direct 'Aquaman' for Warner Bros". Variety. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  4. "Hawaii-born actor Jason Momoa's 'Aquaman' role parallels own upbringing". Star Advertiser. December 16, 2018. https://www.staradvertiser.com/2018/12/16/hawaii-news/hawaii-born-actor-jason-momoas-role-in-aquaman-parallels-his-own-upbringing/. 
  5. Ahmad, Sophia (February 19, 2010). "Interview with Norwalk's 'Conan' star Jason Momoa". Des Moines Register (Iowa) இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 27, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160827002529/http://blogs.desmoinesregister.com/dmr/index.php/2010/02/19/interview-with-norwalk-conan-star-jason-momoa. 
  6. Lalor, Cadeem (August 9, 2018). "42 Imposing Facts About Jason Momoa". பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  7. Rampell, Ed (January 3, 2019). "'Aquaman': The life aquatic with Hawaiian Polynesian Power superhero Jason Momoa". Peoples World. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  8. "How Jason Momoa's Hawaiian and Polynesian Roots Have Impacted His Career". Oprah Daily. August 19, 2019. பார்க்கப்பட்ட நாள் April 20, 2021.
  9. Fleck, Chris (December 19, 2012). "Takeo Kobayashi". Midweek.com. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  10. Kelly, Helen (May 5, 2016). "Game of Thrones: Jason Momoa is unrecognisable as young model before Khal Drogo role". Daily Express. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  11. "Game of Thrones' Jason Momoa Tells the Origin Story Behind His Viral Audition". Time.com. January 20, 2017. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  12. Allin, Olivia (August 20, 2011). "Jason Momoa of 'Conan the Barbarian' talks about his horse fears". OnTheRedCarpet.com இம் மூலத்தில் இருந்து நவம்பர் 6, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181106021011/https://abc7.com/archive/8318234/. 
  13. "Jason Momoa and Lisa Bonet Just Got Officially Married: Details on Their Secret Wedding". Us Weekly. November 2, 2017. https://www.usmagazine.com/celebrity-news/news/jason-momoa-lisa-bonet-officially-marry-in-secret-wedding/. 
  14. "Lisa Bonet's New Baby's Name Is a Mouthful". Access Hollywood. January 9, 2009. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  15. France, Lisa Respers (January 12, 2022). "Jason Momoa and Lisa Bonet announce split". CNN. https://www.cnn.com/2022/01/12/entertainment/jason-momoa-lisa-bonet-split/index.html. 
  16. "Man Pleads Not Guilty To Assaulting "Stargate Atlantis" Actor". KNBC. July 17, 2009. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.
  17. Winton, Richard (October 7, 2009). "Five-year sentence for man who attacked 'Stargate Atlantis' actor Jason Momoa". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் February 23, 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_மோமோவா&oldid=3584825" இலிருந்து மீள்விக்கப்பட்டது