டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்

டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம் (DC Extended Universe) என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் கற்பனையான புனைபிரபஞ்சம் ஆகும். இது அமெரிக்க காமிக் புத்தகமான டிசி காமிக்ஸ்களில் தோன்றும் மீநாயகன் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு டிசி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் வெளியிடப்படும் பட வரிசைகளின் தொகுப்பாகும்.

டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்
DC Comics logo.svg
உருவாக்கம்டிசி பிலிம்ஸ்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்2013-தற்போது வரை

இந்த உரிமையின் கீழ் காமிக் புத்தகங்கள், குறும்படங்கள், நாவல்கள் மற்றும் நிகழ்ப்பட ஆட்டங்கள் அடங்கும். 2002 ஆம் ஆண்டு வார்னர் புரோஸ். என்ற நிறுவனம் டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தோன்றும் எல்லா மீநாயகன்களையும் ஒன்றாக ஒரே படத்தில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். அதே போன்று ஜஸ்டிஸ் லீக் என்ற திரைப்படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 2008 இல் வெளியான த டார்க் நைட் என்ற திரைப்பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ். தனிப்பட்ட உரிமையாளர்களின் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தது, அதனால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு. 2008 ஆம் உருவாக்கப்பட்ட மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் மார்வெல் திரைப் பிரபஞ்சத்திற்கு போட்டியாக 2013 ஆம் ஆண்டு 'டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்' உருவாக்ப்ப்ட்டது. இது முதலில் இயக்குனர் சாக் சினைடர் இயக்கத்தில் ஐந்து படங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் 2018 வாக்கில் டிசி பிலிம்ஸ் தனிப்பட்ட மீநாயகன் திரைப்படங்களை தயாரிபதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், வார்னர்மீடியா போக்கை மாற்றியமைத்து, எதிர்கால படங்கள் மீண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்படும் என்று அறிவித்தது.

முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் படமாக மேன் ஆப் ஸ்டீல்[1] என்ற திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இது சூப்பர் மேன் திரைப்படத்தின் மீள் உருவாக்கம் ஆகும். அதை தொடர்ந்து பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[2] (2016), சூசைட் ஸ்க்வாட்[3] (2016), வொண்டர் வுமன்[4] (2017), ஜஸ்டிஸ் லீக்[5] (2017), அக்குவாமேன்[6] (2017), ஷசாம்![7] (2019), பேர்ட்ஸ் ஆஃப் பிரே[8] (2020), வொண்டர் வுமன் 1984 (2020) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சதின் படங்கள் உலகளாவிய வசூல் ரீதியாக 5.6 பில்லியன் டாலர்களை வசூலித்து. இது எல்லா நேரத்திலும் பதினொன்றாவது மிக அதிக வசூல் செய்த திரைப்பட உரிமையாகும். இதன் அதிக வசூல் செய்த படமான ஆகுமான் என்ற படம் உலகளவில் 1.15 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது மற்றும் இன்றுவரை அதிக வசூல் செய்த டிசி வரைகதையை அடிப்படையிலான திரைப்படபடமாக அமைந்தது.

திரைப்படங்கள்தொகு

திரைப்படம் வெளியான திகதி இயக்குநர்
மேன் ஆப் ஸ்டீல் சூன் 14, 2013 (2013-06-14) சாக் சினைடர்
பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் மார்ச்சு 25, 2016 (2016-03-25)
சூசைட் ஸ்க்வாட் ஆகத்து 5, 2016 (2016-08-05) டேவிட் ஆயர்
வொண்டர் வுமன் சூன் 2, 2017 (2017-06-02) பாட்டி ஜென்கின்ஸ்
ஜஸ்டிஸ் லீக் நவம்பர் 17, 2017 (2017-11-17) சாக் சினைடர்
அக்வாமேன் திசம்பர் 21, 2018 (2018-12-21) ஜேம்ஸ் வான்
ஷசாம்! ஏப்ரல் 5, 2019 (2019-04-05) டேவிட் எஃப். சாண்ட்பெர்க்
பேர்ட்ஸ் ஆஃப் பிரே பெப்ரவரி 7, 2020 (2020-02-07) கேத்தி யான்
வொண்டர் வுமன் 1984 திசம்பர் 25, 2020 (2020-12-25) பாட்டி ஜென்கின்ஸ்
சாக் சினைடர் ஜஸ்டிஸ் லீக் மார்ச்சு 18, 2021 (2021-03-18) சாக் சினைடர்

மேற்கோள்கள்தொகு

  1. Goldberg, Matt (August 17, 2011). "Plot Synopsis for Man of Steel". Collider. September 29, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 31, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chitwood, Adam (June 9, 2015). "Batman vs. Superman Synopsis Revealed". Collider. July 25, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 28, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "New 'Suicide Squad' Plot Synopsis Reveals New Details About the Supervillain Movie". ScreenCrush. December 15, 2015. December 17, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 29, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kroll, Justin (January 23, 2014). "'Wonder Woman' Gal Gadot Signs Three-Picture Deal with Warner Bros". Variety. January 23, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 23, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. McNary, Dave (June 21, 2016). "'Justice League': New Details Emerge About DC's Superhero Movie". Variety. June 22, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. Kit, Borys (August 12, 2014). "'Aquaman' Movie Hooks Two Writers (Exclusive)". The Hollywood Reporter. August 14, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 6, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. Auty, Dan (February 7, 2018). "DC's Shazam: Plot Revealed In New Synopsis". GameSpot. March 28, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 28, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. Kroll, Justin (March 2, 2016). "Will Smith, David Ayer Reteaming on Max Landis Spec 'Bright'". Variety. September 29, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 7, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு