மார்வெல் ஸ்டுடியோ

மார்வெல் ஸ்டுடியோஸ் (Marvel Studios) இந்த நிறுவனத்தை 1993ம் ஆண்டு இருந்து 1996ம் ஆண்டு வரை எல்லோராலும் மார்வெல் பிலிம்ஸ் என அறியப்பட்டது. இது ஒரு அமெரிக்கா நாட்டு திரைப்பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பர்பாங், கலிபோர்னியாவில் உள்ள த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது. இதன் தலைமையிடமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் உள்ளது, இதன் தலைவர் கேவின் பிகே ஆவார்.

மார்வெல் ஸ்டுடியோஸ்
வகைதுணை நிறுவனம்
வகைசூப்பர்ஹீரோ புனைகதை
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்அவி ஆராட் (அதிபர்)[1]´
டாய் பிஸ்
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
துணை நிறுவனங்கள்மார்வெல் இசை
மார்வெல் திரைப்பட புரொடக்சன்ஸ்
மாவல் திரைப் பிரபஞ்சம்
[2]

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் பெரும்தொகை திரைப்படங்கள் ஆகும். இவ் திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் மொழி மற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் அயன் மேன் 2008ஆம் ஆண்டு முதல் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019 ஆம் ஆண்டு வரை மார்வெல் திரைப் பிரபஞ்சத்திற்காக 23 திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன. மற்றும் மார்வெல் தொலைக்காட்சி என்ற நிறுவனம் மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனம் மார்வெல் திரைப் பிரபஞ்சம் தவிர வேறு மார்வெல் கதாபாத்திரங்கங்களான எக்ஸ்-மென் மற்றும் ஸ்பைடர் மேன் திரைப்படத் தொடர்களையும் தயாரித்துள்ளது. இதில் வட அமெரிக்க வசூல் வருவாயில் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை பெற்றது. மார்வெல் ஸ்டுடியோஸ் தொலைக்காட்சித் தொடர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த தொடர்கள் டிஸ்னி+ இல் ஒளிபரப்பாகிறது.

திரைப்படம் தொகு

தொலைக்காட்சி தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Donnelly, Matt (April 17, 2019). "Meet the Executive Avengers Who Help Kevin Feige Make Marvel Magic" (in en). Variety. https://variety.com/2019/film/features/victoria-alonso-louis-desposito-marvel-studios-kevin-feige-avengers-1203189857/. பார்த்த நாள்: April 17, 2019. 
  2. DeMott, Rick (November 13, 2009). "Marvel Studios Promotes Louis D'Esposito to Co-President". Animation World Network. October 4, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 2, 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வெல்_ஸ்டுடியோ&oldid=3587879" இருந்து மீள்விக்கப்பட்டது